FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Tuesday, April 21, 2015

வானொலிக் கதைகள் "அந்தநாள் ஞாபகம் - பள்ளிக்கூடம்"- Episode/பகுதி 21....

வானொலிக் கதைகள் "அந்தநாள் ஞாபகம் - பள்ளிக்கூடம்" Episode/பகுதி-21:-(வானொலிக்கு நான் எழுதிய கதையும் பாடல்களும் நிகழ்ச்சிப் பதிவுகளிலிருந்து) "அப்போதெல்லாம் 9-ம் வகுப்புக்கு வந்துவிட்டாலே எதோ ஒரு பரீட்சை பயம் வந்துவிடும்.  9ம்  மற்றும் 10ம் வகுப்பு அவ்வளவு எளிதாக தேர்ச்சி பெறக்கூடிய வகுப்பு அல்ல என்றும்,  அன்றய பாடங்களை அன்றே முழுவதும் படித்து ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும் இல்லையென்றால் பரிட்சையில் தோல்விதான் 9ம் வகுப்பைத் தாண்டுவது கடினம் என எனது வகுப்பாசிரியர் ஏதேதோ சொல்லி மிரட்டி வைத்திருந்தார்...

பாடல்:- ஏ பார் ஆப்பிள் - A for Apple.. B for Biscuit  https://youtu.be/PBLIgp1XhmI

(9-ம்  வகுப்பு அவ்வளவு எளிதாக தேர்ச்சி பெறக்கூடிய வகுப்பு அல்ல என்றும்,  வகுப்பாசிரியர் ஏதேதோ சொல்லி மிரட்டி வைத்திருந்தார்... அந்தக்காலத்தில் பல கிராமத்து மாணவ, மாணவியர்கள் 9-ம் வகுப்பில் தனது படிப்பை நிறுத்திவிட இதுவும் ஒரு காரணம் என்றும் கூறலாம்). பாடல்:- "படிப்புக்கும் ஒரு கும்பிடு"... படம் :-இரும்புத் திரை (1960), பாடலாசிரியர் : கொத்தமங்கலம் சுப்பு, இசை : எஸ் வி வெங்கட்ராமன்  https://youtu.be/_k06MusuBeQ

அன்றைய தேர்வு முடிவுகளில் 9ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பிற்கு தேர்ச்சி  பெற்றிருந்த மகிழ்ச்சியில், புது வகுப்பில் புது பாடங்கள், புத்தகங்கள் என அன்றுதான் புதிதாக பிறந்தவன் போல ஒரு குதூகலம் மனதில் நிறைந்திருந்தது. பாடல் "வெற்றிமீது வெற்றிவந்து என்னைச்சேரும் அதை வாங்கி தந்த பெருமையெல்லாம் உம்மைச்சேரும்  https://youtu.be/kYSsx_BZOp8

எதிரில் நண்பன் வந்தான் அவனும் வெற்றிபெற்றிருப்பன் இருப்பினும் பொதுவாக இருக்கட்டுமே என்று "நண்பா, உனக்கு கிடைத்ததுதான் எனக்கும் கிடைத்தது என்று கூறினேன்" அதைக்கேட்ட  அவனது முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.  தொடர்ந்து இருவரும் சேர்ந்து ஏதேதோ பேசிக்கொண்டே  கடைத்தெரு வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தோம்.   பாடல்:- உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி - நெஞ்சில் தூங்கிக் கிடக்குது நீதி  https://youtu.be/boyVeLaj14Y

என் மனம் புதிய வகுப்பு,  புதிய புத்தகங்கள் என எதோ ஒரு  மகிழ்ச்சியான சிந்தனைகள் மனதில் ஓட, தொடர்ந்து கடைத்தேருவழியாக நடந்துகொண்டிருந்தோம். பாடல் "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை  https://youtu.be/FfE1rTqyC-Y 

வழியில் மாணவ மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் என ஏராளமானவர்கள் ஒரு புத்தகக் கடைமுழுவதும் நிரம்பி வழிந்தார்கள். மனம் பரபரத்தது எனக்கும் புதிய புத்தகம் வாங்கவேண்டும் என்று ஆசைதான். புதுப்புத்தகத்தின் வாசனை எனக்கு ரொம்ப பிடிக்கும். இருப்பினும் எனது குடும்ப சூழ்நிலையில் பாதிவிலையில் அதிலும் அனைத்து புத்தகங்களும் ஒரே நேரத்தில் வாங்க முடியாத சூழ்நிலை.  
பாடல்:- நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு,.. வாழ்ந்தே தீருவோம்!  https://youtu.be/NaItT2DZVXU

சிறிது நேரம் அந்தக் கடையில் நிரம்பிவழிந்த கூட்டத்தை பார்த்தபடி நண்பனும் நானும்  நின்றுகொண்டிருந்தோம். என் வயதுதான் இருக்கும், அந்த மாணவன் அவனது அப்பாவிடம் இந்த புத்தகம் வேண்டும்...அதுவும் வேண்டும் என்று தொடர்ந்து புது புது புத்தகங்களை அடுக்கிக்கொண்டிருந்தான்.  கூட்டத்தில் சிறிது இடைவெளி தெரிந்தது சற்றென்று நான் அந்தக் கடையின் கூட்டத்தினுள்  நுழைந்து, கடைக்காரரிடம் 10ம் வகுப்பு புத்தகங்களின் மொத்த விலை எவ்வளவு என்று கேட்டேன். அவர் காசு வைத்திருக்கிறாயா? இல்லையென்றால் பிறகு வா என்று கூறிவிட்டு வேறு ஒருவருக்கு புத்தகம் விற்க விலை கூறிக்கொண்டிருந்தார். பாடல்:- காசேதான் கடவுளடா அந்த கடவுளுக்கும்  இது தெரியுமாடா https://youtu.be/Hv6lb4ttBOI

எனது பரிதாப நிலையை அந்தக்கடையில் புத்தகம் வாங்கிக்கொண்டிருந்த மாணவனும் அவனது தந்தையும் பார்த்துக்கொண்டிருந்தனர். என்ன நினைத்தாரோ? அவர் என்னை அருகில் அழைத்தார். அவரது சட்டைப்பையிலிருந்து, அவர் வீட்டு முகவரி பதித்த அழைப்பு சீட்டு (visiting card) ஒன்றை என்னிடம் தந்து, நாளை வீட்டிற்கு வந்து அவரது மகனின் சென்ற ஆண்டு  படித்த 10ம் வகுப்பு புத்தகங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். சந்தோசத்தில் அவரது பாதங்களில் சாஸ்டாங்கமாக விழுந்து நன்றியை தெரிவிக்க மனம் நினைத்தாலும் கூட்ட நெரிச்சலில் முடியாதுபோனதால் அவரிடம் நின்றபடியே நன்றி கூறி,  அந்த மகிழ்ச்சியை தனது வீட்டிற்கும் தெரிவிக்க, நண்பனின் கையை பிடித்து அவனையும் வேகமாக தரதர வென்று இழுத்துக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினேன். பாடல்:- நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்திருந்தேன் .. https://youtu.be/NnOPdx7Gn24

மறுநாள் காலை விடியமாட்டேன் என்று அடம் பிடித்தது. அருகிலிருந்த கையடிக்குழாயில் காக்கா குளியல் முடித்து வீட்டிற்க்குள் நுழைந்தபோது அம்மாவும் காஞ்சி குடித்துவிட்டு வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தார்கள். எனக்கும் ஒரு கலயத்தில் கஞ்சியும் தொட்டுக்கொள்ள ஊறுகாயும் வைத்திருந்தார்கள். கஞ்சியை குடித்துவிட்டு, வீட்டை தாழ் போட்டுவிட்டு, வெளியில் செல்ல சொல்லிவிட்டு, அம்மா வேலைக்கு சென்றுவிட்டார். பாவம் அவர்களுக்குத்தான் பள்ளிக்கூடம் படிப்பறிவு என்பது கிடைக்காத கனியாகிவிட்டதால் தனது மகனாவது நன்கு படிக்கட்டும் என்று பெற்றோர்கள் கூலி வேலைக்கு செல்கிறார்கள்.  பாடல்:-பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தானறியேன், ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்,  https://youtu.be/_k06MusuBeQ   
விலாசத்தை கண்டுபிடித்து, தயங்கி தயங்கி வீட்டின் வெளியிலிருந்து ஐயா என்று குரல் கொடுத்தேன்.முதலில் நேற்றுபார்த்த அந்த மாணவன் வெளியில் வந்தான் என்னை பார்த்தபிறகு, அப்பா என்று கூறிக்கொண்டு வீட்டினுள்ளே சென்றுவிட்டான். சிறிது நேரத்தில் அந்த மாணவனின் "அப்பா" அவர்கள் வீட்டினுள்ளிருந்து வெளியில் வந்தார், என்னை வீட்டிற்குள் அழைத்தார், நான் வீட்டிற்குள் சென்றதும்  அங்கு ஏற்க்கனவே அனைத்து புத்தகங்களையும் தயாராக எடுத்து வைத்திருந்ததைக் கண்டேன். அங்கு எனக்கு தருவதற்காக அடுக்கி வைத்திருந்த புத்தகங்களைக் காட்டிய அவர், இதேபோல உன்னுடைய சென்ற ஆண்டு 9ம் வகுப்பு புத்தகங்களையும், நீயும் மற்றொரு மாணவனுக்கு இலவசமாக தரவேண்டும் என்று கட்டளையிட்டார். நானும் அதற்க்கு என்னுடைய மனப்பூர்வமான சம்மதத்தை தெரிவித்தேன். பாடல்:- மனிதனென்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம் வாழைபோல தன்னை ஈந்து தியாகியாகலாம். https://youtu.be/6Eg20JQwGYY 

அனைத்துபுத்தகங்களும் புதியதுபோலவே அட்டை போடப்பட்டு அழகாக இருந்தது. அதை பார்த்தபோதே மனதில் ஒரு ஆர்வம் ஊற்றடுத்து ஓடியது. அனைத்து புத்தகங்களையும் சரி பாதியாக அடுக்கிப் பிரித்து, எனது இரு தோள்களில் சுமந்துகொண்டு "நன்றி ஐயா" என்று கூறி அங்கிருந்து விடைபெற்றேன்.  பாடல்:- பாட்டு வாழ்ந்து பார்க்கவேண்டும் உலகில் மனிதனாகவேண்டும்  https://youtu.be/YU-b1hNh0g0

மனது முழுவதும் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. புத்தகங்கள் இலவசமாக எனக்கு கிடைத்ததுபோல எனது  நண்பனுக்கும் கிடைக்கவேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். அப்போதுதான்  எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. என்னைப்போலவே பலருக்கும் இதுபோல இலவசமாக பாட புத்தகம் கிடைத்தால் இன்னும் பலமடங்கு மகிழ்ச்சி கிடைக்குமல்லவா என்கிற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. வீட்டிற்கு சென்று தோளில் சுமந்திருந்த புத்தகங்களை வைத்துவிட்டு, அங்கு இருந்த என்னுடைய 9ம் வகுப்பு பாட புத்தகங்களை எடுத்துக்கொண்டு, நண்பனையும் அதுபோலவே அவனது 9ம் வகுப்பு புத்தகங்களை எடுத்துக்கொண்டு நாங்களிருவரும் பள்ளிக்கூடம் நோக்கி ஓடினோம்.  பாடல்:-சிரித்துவாழவேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே https://youtu.be/Ji4Qzh2cXD4
பள்ளியினுள் நுழைந்தவுடன் அங்கிருந்த 8ம் வகுப்பு தேறிய, 9ம் வகுப்புக்கு செல்ல இருக்கும் மாணவர்களை நோக்கி... உங்களுக்கு 9ம் வகுப்பு புத்தகங்கள் இலவசமாக வேண்டுமா? உங்களுடைய பழைய 8ம் வகுப்பு புத்தகங்களை தந்துவிட்டு இந்த 9ம் வகுப்பு புத்தகங்களை பெற்றுக்கொள்ளுங்கள் என்று குரல் கொடுத்தோம். அதைக்கேட்ட பல மாணவர்கள் எங்களை நோக்கி ஓடி வந்தார்கள். சற்று நேரத்தில் 10ம் வகுப்பு மற்றும் 11, 12ம் வகுப்பு மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் என அனைவரும் அருமையான யோசனை என்று என்னை பாராட்டி அனைவரும் ஒன்று கூடினார்கள். அவர்களின் சென்ற ஆண்டு புத்தகங்களை பெற்றுக்கொண்டு அடுத்த ஆண்டு புத்தகங்களை மாற்றிக்கொண்டிருந்தோம். சற்று தூரத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியர்களும் இந்த கூடத்தை பார்த்துவிட்டு எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள், மனதில் சற்று பயம் வந்தது இதோடு நிறுத்திவிடலாம, என்கிற எண்ணம் தோன்றியது அதற்குள் "என்ன இங்கு கூட்டம்" என்று அதட்டலோடு வகுப்பு ஆசிரியரும், தலைமை ஆசிரியர் அவர்களும் என்னை நெருங்கிவிட்டார்கள்.  பாடல்:- நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே ... நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை வளரும் முல்லைகளே https://youtu.be/D2kQOWCzcl4

விவரத்தைக் கேள்விப்பட்டதும், தலைமை ஆசிரியர் என்னை முதுகில் தட்டிக்கொடுத்து அருமையான பணியை செய்திருக்கிறாய் என்று பாராட்டியதோடு, பள்ளி நூலக ஆசிரியரை அழைத்து இந்த மாணவனுக்கு தேவையான இடவசதியை பள்ளி நூலகத்தில் செய்துகொடுக்குமாறு கட்டளையிட்டார். அதோடு பள்ளியின் முதல் நாள் காலை தொழுகை கூட்டத்தில் என்னை மேடைக்கு அழைத்து பள்ளியின் அனைத்து மாணவர்களின் முன்னிலையில் பாராட்டியதோடு, ஏழை மாணவர்கள் பயன்பெறும் இந்த திட்டம் சிறப்பான ஒரு திட்டம் என்றும் இதை செயல் படுத்திய என்னை சிறந்த மாணவன் என்று பாராட்டியதோடு, இதை அனைத்துப்பள்ளிகளிலும் செயல்படுத்தும்படி பள்ளிக்கல்வி இயக்குனருக்கு கடிதம் எழுதப்போவதாகவும் கூறினார்.   பாடல்:- நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி  https://youtu.be/XG_gSzVn1Ys

இப்போது உங்களுக்கும் அந்த மாணவன் யார் என்று தெரிந்திருக்கும். பின்னாளில் அதே பள்ளியில் மேல்நிலை வகுப்பில் பகுதிநேர ஆசிரியராக பணியாற்ற வாய்ப்பை பெற்றுத்தந்ததும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்தான். பாடல்:- வாங்கய்யா வாத்தியாரய்யா வரவேற்க வந்தோமைய்யா ஏழைகள் உங்களை நம்பி....  https://youtu.be/7lIENBK-la4

(இரண்டு வருடம் பகுதிநேர ஆசிரியராக நான் படித்த அதே பள்ளியில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் என எனது நாட்குறிப்பு புத்தகத்தில் இது குறித்தும், அப்போது நடந்த பல சுவையான சம்பவங்களையும் எழுதி வைத்திருக்கிறேன்.)....  பாடல்:- மீண்டும் பள்ளிக்கு போகலாம் https://youtu.be/51sfVxD_wlE
ஒருவேளை இந்த திட்ட விவரங்கள் உங்களின் பள்ளியில் நடைமுறையில் இல்லையென்றால், அனைத்து ஏழை மாணவர்களின் பயனைக்கருத்தில் கொண்டு, நீங்களே முன்னின்று இந்த சேவைப்பணியை உங்களின் அருகாமையில் இருக்கும் பள்ளியில் தொடங்கிவைத்தால், நீங்கள் செய்த இந்த உதவி உங்களின் எதிர்கால சந்ததியினரின் சிறப்பான வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்பது திண்ணம். "  பாடல்:-நல்ல நல்ல சேவை... நாட்டுக்கு தேவை... Film : Porter kanthan (1955) https://youtu.be/-Y4bCc135QY 

இப்படிக்கு, நன்றிகளுடன் கோகி என்னும் கோபால் கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.  
பாடல்:- எல்லோரும் நலம்வாழ நான் பாடுவேன், நான் வாழ யார் பாடுவார்; என் பாடல் நான் பாட பலர் ஆடுவார், இனி என்னோடு யார் ஆடுவார் ??????  https://youtu.be/vo00ogHbydI

No comments:

FREE JOBS EARN FROM HOME