FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, March 20, 2015

இயலாமையின் கோப தாபம்:-

இயலாமையின் கோப தாபம்:-

பலநேரம்   
நான் சிதறி விட்ட வார்த்தைகள் 
என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் 
என் மௌனம் என்றுமே 
என்னைக் கலங்க வைத்ததில்லை.
முயலும் வெல்லும் 
ஆமையும் வெல்லும்
முயலாமை வெல்லாது....

....விடாமல் முயலுங்கள், 
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சிந்திப்போம்! 
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. (புது தில்லி) 

விலையில்லா "துளசி தீர்த்தத்தின்" விலைமதிப்பற்ற பெருமையை

வயதான பாட்டி, அவருக்கு தினமும் தான் பிரியமுடன் வணங்கும் பகவான் ஸ்ரீ ராதா கிருஷ்ணனுக்கு நெய்வேத்தியம் படைப்பது வழக்கம். பாட்டியிடம் போதிய பணவசதி இல்லை என்றாலும் வீட்டில் சமைக்கும் உணவை-"சாதத்தை" தினமும் தான் வணங்கும் ஸ்ரீ ராதா கிருஷ்ணனுக்கு படைத்த பிறகுதான் அனைவரும் உண்ணவேண்டும் என்பதை வழக்கத்தில் வைத்திருந்தார்.  

திடீரென அதற்கும் இடைஞ்சலாக மகனுக்கும் அவனுடைய மனைவிக்கும் அவர்களது அலுவலக நேர மாற்றத்தின் விளைவாக  விடியற்காலையிலேயே சமைத்த சாதத்தை சாப்பிட்டுவிட்டு , மதியத்திற்கான உணவையும் கையேடு எடுத்துச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டதால், பாட்டிக்கு தர்ம சங்கடம் ஏற்ப்பட்டது. 

தனியாக சுவாமிக்கு நெய்வேத்திய பிரசாதம் தயார் செய்ய, தன்னால் ஒரு செலவு மற்றும் தொந்தரவு என்கிற பழிச்சொல் வந்துவிடுமோ? அப்படி பழிச்சொல்லோடு செய்யும் நெய்வேத்திய பிரசாதம் சரியானது இல்லை என்கிற முடிவில், அங்கும்-இங்கும் வைத்திருந்த காசுகளை ஒன்றாக சேர்த்து, கடையிலிருந்து கல்கண்டு வாங்கிவந்து, அதை பிரசாதமாக  நெய்வேத்தியம் செய்து,பேரன், பேத்தி,மருமகள் என்று அனைவருக்கும் கைநிறைய கல்கண்டு பிரசாதம் வழங்கியதோடு, தனது கணவருக்கும், மகனுக்கும் மட்டும் சக்கரை வியாதி இருப்பதால் ஒரு சிறு கல்கண்டு துகளை மட்டும் பிரசாதமாக தந்தார். அன்றைய பொழுது அதே சிந்தனையில் நகர்ந்தாலும், மேலும் இரண்டு நாட்கள் அதே நிலை தொடர்ந்தது.

மறுநாள் புரட்டாசி மாதம், முதல் சனிக்கிழமை, துவாதசி திதி கூடிய விசேஷமான நாளாக இருந்ததால்,  காலையில் வழக்கம்போல ஸ்ரீ ராதா கிருஷ்ணனுக்கு நெய்வேத்தியம் செய்ய முனைந்தபோது,  அவர் வாங்கிவைத்திருந்த கல்கண்டு பிரசாதத்தை சுற்றி ஏராளமான எறும்புகள் மொய்த்தவண்ணம் இருந்ததைக்கண்டு... இன்று பகவானுக்கு தன்னால் நெய்வேத்திய பிரசாதம் படைக்க முடியாமல் போகுமோ? என்று மனம் வருந்தினார். 

வேறு வழிதோன்றாமல் வீட்டு தோட்டத்திலிருந்து பறித்த துளசி இலைகளை தண்ணீரில் கலந்து "துளசி தீர்த்தமாக" செய்து பகவானுக்கு நெய்வேத்தியம் செய்தார். அதிசயமாக அன்று அனைவரும் துளசி தீர்த்தப் பிரசாதத்தை இரண்டு மூன்று முறை கேட்டு வாங்கி சாப்பிட்டதை நினைத்து பெருமிதமடைந்தார். விலை கொடுத்து வாங்கிய கல்கண்டு பிரசாதம் கடுகளவே உண்டாலும், சக்கரை நோய்க்கு விஷமாகும். விலையில்லா துளசி தீர்த்தப் பிரசாதம் எந்த நோய்க்கும் மருந்தாகும்.  விலைகொடுத்து வாங்கிய "கல்கண்டு" பிரசாதத்தைவிட, விலையில்லா "துளசி தீர்த்தத்தின்" விலைமதிப்பற்ற  பெருமையை  எண்ணி வியந்தார்.  

திருமலைக்கு வருகிறேன், காணிக்கை தருகிறேன் என்கிற பெருமாள் கோவிலுக்கு வேண்டுதல்  எப்போது நிறைவேறுமோ? அதை உடனே நிறைவேற்றமுடியவில்லையே? என்கிற கவலை உங்களுக்கு இருந்தால், உடனே சிறு துளசிதளம் (துளசி இலைக் கொத்து) பறித்து அதை தாமிர அல்லது வெண்கல கிண்ணத்தில் போட்டு அந்தக் கிண்ணம் நிறைய தண்ணீர் ஊற்றி,  நடு வீட்டில் ஒரு சிறு மாக்கோலம் போட்டு அதன் மீது கிண்ணத்தை வைத்து, அந்தக்கின்னத்தை நூத்திஎட்டு  சுற்றுக்கள் "ஓம் நமோ நாராயணாய" என்று கூறியபடி சுற்றிவந்தால்...108-பெருமாள் கோவிலுக்கு சென்று வந்த புண்ணியமும் உங்களின் வேண்டுதலும் நிறைவேறும் என்பது ஆன்றோர் கூற்று. 

விடாமல் முயலுங்கள், 
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சிந்திப்போம்! 
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. (புது தில்லி) தற்போது இந்தியாவின் உத்திராகண்ட் மாநிலத்திலிருந்து.....

எளிமையான கல்விக்கடனுக்கு இளையவர் வங்கிக்கணக்கு அவசியம்.



எளிமையான கல்விக்கடனுக்கு  இளையவர் வங்கிக்கணக்கு அவசியம்.....உங்களின் குழந்தைகளுக்கு பத்து வயது பூர்தியாகும்போதே ஏதாவது ஒரு வங்கியில் இளையவர் வங்கிக்கணக்கை துவங்கிவிடுங்கள். அதோடு அவர்களின் பள்ளிப்படிப்பிற்கு செலுத்தவேண்டிய கட்டணங்களை இந்த வங்கிக்கனக்கின் மூலம் செலுத்துங்கள். காரணம் உயர் கல்வி படிப்பிற்கு தேவையான தொகை கிடைக்காதபோது நீண்ட நாட்கள் வங்கி கணக்கை வைத்திருந்த தகுதியின் அடிப்படையில் உங்களின் மகள்/மகனுக்கு அதே வங்கியில் உடனே கல்விக்கடன் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதாவது 18 வயதிற்கு பிறகு உங்களின் மகள்/மகன் படிப்பு செலவுக்கு உங்களை சார்ந்து இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை, அவர்களாகவே கல்விக்கடன் பெற்று அவர்களின் விருப்பப்படி படிக்க முடியும். அவர்களின் காலில் அவர்களே நிலைத்து நிற்கும் பொறுப்புள்ளவர்களாக உங்கள் பிள்ளைகளும் இப்படிப்பாடுவார்கள்......"எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்...வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே". http://youtu.be/geYyN5_QYKg

மாணவர்களின் கல்விக் கடன் பிரச்சினைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதற்காக ‘கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

படிப்பை முடித்து ஓராண்டு வரை கல்விக் கடனுக்கான வட்டியோ, அசலோ திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயமில்லை. இந்தக் காலகட்டத்தில் கடனுக்கான வட்டியை மத்திய அரசே சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வழங்கிவிடும். வட்டி தள்ளுபடி காலம் முடிந்த பிறகு அந்தந்த வங்கிகளின் வட்டி விகிதப்படி வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு 72 அல்லது 120 தவணைகளில் வட்டியையும் அசலையும் மாணவர்கள் செலுத்த வேண்டும்.

இது தான் 2009-ம் ஆண்டு மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு. ஆனால், இதன்படி எந்த வங்கியும் செயல்படுவதில்லை என்கிறார் நாமக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார். தனது மகளுக்கு கல்விக் கடன் வழங்கிய நாளில் இருந்து 14 சதவீதம் வட்டி விதித்த ஒரு தனியார் வங்கியை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்திருக்கும் ராஜ்குமார், தன்னைப் போல பாதிக்கப்பட்ட நபர்களை ஒருங் கிணைத்து ‘கல்விக் கடன் விழிப் புணர்வு இயக்கம்’ என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய அவர் கூறியதாவது: கல்விக் கடன் விவகாரத்தில் மாணவர்க ளுக்காக தவணை விடுப்பு காலத்தில் மத்திய அரசிடம் இருந்து 5 சதவீதம் வட்டியைப் பெற்றுக்கொள்ளும் சில வங்கிகள், அதை மறைத்து சம்பந்தப் பட்ட மாணவர்களிடமும் 14 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றன. மத்திய அரசு வழங்கும் வட்டி மானியத்தை மற்ற வங்கிகளுக்கு வழங்கும் முன்னோடி வங்கியாக (Lead Bank) கனரா வங்கியை நியமித்திருக்கிறார்கள். இதில் என்ன வேதனை என்றால், பெரும்பாலான வங்கிகள் தங்களுக்கு வரவேண்டிய வட்டி மானியத்தை கனரா வங்கியிடம் இருந்து பெறுவதற்கு அக்கறை காட்டவில்லை.

இதனால் அந்த நிதியானது மத்திய அரசின் கஜானாவுக்கே திரும்பிவிட்டது. அரசு கொடுத்த மானியத்தை வாங்காத வங்கிகள் இப்போது அதையும் மாணவர்கள் தலையில் ஏற்றிவிட்டன. எஸ்.சி - எஸ்.டி மாணவர்களின் கல்விக் கடனுக்கான வட்டி மானியத்தை 2009-ல் இருந்து பெரும்பாலான வங்கிகள் பெற்றுக் கொள்ளாமல் இருக்கின்றன.

ஒன்று அந்த வங்கிகள் அந்தப் பிரிவு மாணவர்களுக்கு கடன் வழங்க மறுத்திருக்க வேண்டும் அல்லது கடனுக்கான வட்டியை அந்த மாணவர்களிடம் இருந்தே வசூலித்திருக்க வேண்டும்.
இந்தக் காரணங்களால்தான் அந்த வங்கிகள் வட்டி மானியத்தை பெறாமல் இருக்கின்றன. இதை அறிந்த இந்திய வங்கிகள் சங்கம், எஸ்.சி - எஸ்.டி மாணவர்களின் கல்விக் கடனுக்கான வட்டி மானிய தொகை கனரா வங்கியில் ஏராளமாக இருப்பில் உள்ளது.

சம்பந்தப்பட்ட வங்கிகள் அதை உடனடியாக பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றன என்று நவம்பர் 5-ம் தேதி, அனைத்து வங்கி களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. மொத்தத்தில் கல்விக் கடன் விவகாரத்தில் மத்திய அரசு விதித்த நிபந்தனைகளை வங்கிகள் கண்டுகொள்ளவில்லை.

இது குறித்து நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி, இந்திய வங்கிகள் சங்கம் ஆகி யோருக்கு நான் அனுப்பிய புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப் படாததால் அவர்களையும் வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்திருக் கிறேன். எனவே, கல்விக் கடன் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ‘கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம்.

கல்வி சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினை களுக்கும் உரிய தீர்வை இந்த இயக்கம் முன்னெடுத்துச் செய்யும் என்று ராஜ்குமார் தெரிவித்தார். (தொடர்புக்கு: +91-9442164601)

Thursday, March 19, 2015

விதியின் பிடியிலிருந்து எப்படி தப்புவது?

பாவம் என்பது நமது எண்ணங்களின் செயல்பாடுகளோ? என்று ஒரு சந்தேகம் வருகிறது. சற்று சிந்தித்துப்பார்த்தால் "நடந்துகொண்டிருக்கிற நான், 'கால் இடறி தரையில் வீழ்வேன்' என்று நமது மனதில் ஓர் எண்ணம் நம்மை தொடருமேயானால், நிச்சயம் நாம் தரையில் வீழ்வது உறுதி. ஆகவே செயல்களைவிட நமது எண்ணங்கள்தான் நமது  தலைவிதியை நிர்ணயிக்கிறதோ என்கிற ஆணித்தரமான நம்பிக்கை மனதில் தோன்றுகிறது. 

திருவள்ளுவரும் 113வது அதிகாரத்தில் ஊழ் என்று தனி அதிகாரமே தந்திருக்கிறார். மேலும் எண்ணிய எண்ணியாங்கு எய்துப என்று கூறியிருப்பதையும் கருத்தில் கொண்டு பார்த்தால் நமது எண்ணங்கள்தான் விதியை நிர்ணயிக்கிறது என்பது புரிகிறது.  

சரி மனிதப்பிறவி தமது எண்ணங்களின் பிரதி பிம்பங்களான விதியின் பிடியிலிருந்து எப்படி தப்புவது? நம்பிக்கையானது, நல்லது மற்றும்   ஏற்புடையது என ஏற்றுக்கொள்ளுதல் போன்ற இன்னும் பல்வேறு அர்த்தங்களை கொண்டது.  நல்லது அல்லாதவைகளையும்,  "நல்லதாக" பார்ப்பது கூட ஒரு வகையில் நம்பிக்கயின் வடிவங்கள்தான். உதாரணமாக நாம் சாலையில் நடந்துகொண்டிருக்கும்போது நமது காலடியில்,  எறும்பு போன்ற பல்வேறு சிறு  உயிரினங்கள் மிதிபட்டு இறக்கின்றன, அதற்க்கு நாம்  பாவம் செய்ததாக வருந்துவதைவிட, அவைகளின் அந்தப் பிறவியிலிருந்து விடுபட்டு , அதைவிட சற்று உயரிய மறு பிறவி பெறுவதற்கு  நம்மால் ஆனா ஒரு உதவியாக நினைப்பதுதான் சிறந்தது, ஏன் எனில் இராமாயணம், மகாபாரதம் போன்ற இன்னும் பல புராண இதிகாசங்களிலும், பல உயிர்கள் இறப்பது பாவ விமோச்சனமாகவும் அல்லது கீழ் உயிரினத்திலிருந்து  விமோசனம் பெற்று உயரிய உயிருனமாக மறு பிறவி எடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே நமது எண்ணங்களை சிறப்பான எண்ணங்களாக மாற்றினால் நமது தலைவிதியும் மாறிவிடும் என்பது தெரிகிறது.  ஆகவே நமது சிந்தனைகளை நெறிப்படுத்திக் கொண்டு செயல்படுவோமேயானால்  நமது தலைவிதியும் (எப்பிரவியாயினும்) சிறப்பாகவே இருக்கும்.. 

"நீ எதை தூக்கி எரிகிராயோ அது உன்னிடம் திரும்ப வரும் - மகாபாரதம் ... ஆவகே நமது எண்ணங்கள் நல்லவைகளாக பிறருக்கு உதவுமேயானால் அது நமக்கும் நல்லதாகவே அமையும். 

வாழ்க்கை மீது விதிக்கப்பட்டிருக்கும் சில எதார்த்தங்களை ஒப்புக் கொள்ள மறுக்காதீர்கள். நம் முன்னோர் அப்படியான எதார்த்த நிகழ்வுகளை “விதி” என்று வகைப்படுத்தினார்கள். அதை மாற்ற முடியாது என்பதாலேதான் “விதியை மாற்ற முடியும்” எனச் சொல்லாமல் “விதியை மதியால் வெல்லலாம்” எனச் சொல்லித் தந்தனர்..

விதியென்று ஏதுமில்லைவேதங்கள் வாழ்க்கையில்லை... உடலுண்டு உள்ளமுண்டு. முன்னேறு மேலே மேலே.

நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. (புது தில்லி) தற்போது உத்திராகண்ட் மாநிலத்திலிருந்து.....  

Monday, March 2, 2015

நமது "தலைவிதி" என்கிற "குருவிக் குடை!

"குருவிக் குடை"
அனுதினம் விழித்தெழுந்து
அதற்காகவே காத்திருந்தபோதும்,
குருவியளவு அதிர்ஷ்ட மழையில்  கூட...
நம்மை நனைந்துவிடாமல் காக்கும்...
நமது "தலைவிதி" என்கிற
"குருவிக் குடை!..."


# "நான்"

சிறு குருவியே, ஆனாலும்......
பனி மலையின்
உச்சியில் நான் .....


# "அவ்வளவு பெரிய பற்களா"

தலை வாரும்  சீப்புக்கும்கூட
பற்கள் உண்டு ....
உன் காலை,
நான் வாரிவிட்டேன் என்கிறாயே ...
எனக்கு என்ன அவ்வளவு பெரிய
பற்களா இருக்கிறது ?????????????

FREE JOBS EARN FROM HOME