கோகி-ரேடியோ மார்கோனி: "EXCHANGE OFFER -ஒரு உண்மை உயிர்த்தெழுகிறது"

FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, April 19, 2013

"EXCHANGE OFFER -ஒரு உண்மை உயிர்த்தெழுகிறது"

"EXCHANGE OFFER -ஒரு உண்மை உயிர்த்தெழுகிறது" பொறியியல் கவுன்சிலிங் முடித்து தான் ஆசைப்பட்ட கல்லூரியை தேர்வு செய்த திருப்தியுடன் வெளியே வந்தாள் கஸ்தூரி. ஆட்டோ ஓட்டி தன் மகளை பொறியியல் கல்லூரி வரைக்கும் கொண்...டு வந்த திருப்தியுடன் கந்தசாமியும் இருந்தார். ஆனாலும் இன்னும் நான்கு வருடங்களுக்கு செலவு செய்ய வேண்டிய தொகை ரொம்பவே பயமுறுத்தத்தான் செய்தது. கவுன்சிலிங் நடந்த ஹாலை விட்டு வெளியே நடந்து வந்து கொண்டிருந்த போது "எக்ஸ்கியூஸ்மீ" என்ற குரல் கேட்க இருவரும் திரும்பினர். அழைத்தது ஒரு பெண். "உங்களிடம் கொஞ்சம் பேசலாமா" என்று கேட்டுக்கொண்டே அருகிலிருந்த காருக்கு அருகில் அழைத்தாள். கந்தசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் கஸ்தூரியை அழைத்துக் கொண்டு அருகில் சென்றார். தன்னை மதுமதி என்று அறிமுகம் செய்து கொண்ட அந்த பெண்மணி கந்தசாமியின் முழு பயொடேட்டாவையும் இவரிடமே சொல்ல இவருக்கு தூக்கி வாரிப் போட்டது.... ஆனாலும் அந்த பெண்மணி சொன்ன டீல் கந்தசாமிக்கு கொஞ்சம் கிறங்கடிக்கத்தான் செய்தது. கஸ்தூரி தேர்வு செய்திருந்த முதல் தர வரிசை கல்லூரியின் பிரதிநிதியான அந்த பெண்மணி சொன்ன டீல் என்ன தெரியுமா? தங்களுக்கு சொந்தமான புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த இன்னொரு கல்லூரியில் சேரும்படியும் அதற்கு பிரதிபலனாக நான்கு வருடங்களுக்கான மொத்த கல்விக் கட்டணத்தையும் கல்லூரியே ஏற்றுக் கொள்வதுடன் ஒரு கணிசமான தொகையும் கையில் தருவதாக சொன்னார்.

இங்கே விஷயத்துக்கு வருவோம். கஸ்தூரி முதலில் தேர்வு செய்த கல்லூரியில் அவள் தேர்வு செய்த பிரிவின் விலை சுமார் 12 லட்சம். அதனை அவள் சேராமல் விட்டு விட்டால் அந்த இடம் கல்லூரி கோட்டாவுக்கே போய் சேர்ந்து விடும். பின் அவர்கள் அதனை கவுன்சிலிங் முடிந்தவுடன் காலி இடமாக காட்டி இன்னும் அதிக விலைக்கு விற்று விடுவார்கள். ஆனால் இந்த நான்கு வருடங்களில் கஸ்தூரிக்கு அவர்கள் கட்டும் கட்டணம் சுமார் 4 லட்சம் என்றும் கையில் கொடுத்த தொகை 2லட்சம் என்றே வைத்துக் கொண்டாலும் கல்லூரி முதலாளிக்கு கிடைத்த லாபம் 7லட்சம் மற்றும் அதற்கு மேல். கஸ்தூரியும் ஒரு வழியாக எந்த செலவும் இல்லாமல் இந்த ஆண்டு இறுதியாண்டினை படித்துக்கொண்டிருக்கிறாள். பல்கலைக் கழக அளவில் தரவரிசையிலும் இடம் பிடித்திருக்கிறாள். இந்த EXCHANGE OFFER சூப்பரா இருக்கில்ல...........சட்டம் போட்டு தடுக்குர கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது......திட்டம் போட்டு திருடுர கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது........
Post a Comment

FREE JOBS EARN FROM HOME