கோகி-ரேடியோ மார்கோனி: "மாணவர்களுக்கு தன்நம்பிக்கையையும் சேர்த்து கற்ப்பிக்கும் சிறப்பான கல்வி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்"

FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, April 19, 2013

"மாணவர்களுக்கு தன்நம்பிக்கையையும் சேர்த்து கற்ப்பிக்கும் சிறப்பான கல்வி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்"


"மாணவர்களுக்கு தன்நம்பிக்கையையும் சேர்த்து கற்ப்பிக்கும் சிறப்பான கல்வி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்" இன்றைய பார்வை.....சிங்கப்பூரிலிருந்து கோகி ....உலகளாவிய தமிழர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளும் அளவிற்கு, ஏப்பரல் மாதம் முழுதும் சிங்கப்பூரில் தமிழ் மாதமாக கொண்டாடப்படுகிறது. ஒன்றல்ல இரண்டல்ல... தினமும் பல தமிழ் மொழி இலக்கியம் சார்ந்த நிகழ்சிகள்...மாதம் முழுவதும் கொண்டாடப்படுவது ஒவொரு தமிழரும் பெருமைப்படக்கூடிய ஒன்று, நேற்றைய நிகச்சி ஒன்றில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது, வலர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில், தங்கமீன் வாசகர்கள் மன்றத்தின் ஏற்பாட்டில், எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் திரு ஞாநி அவர்களின் "திரைக்கதைப் பயிலரங்கப் பயிற்சி ஒன்றை சிங்கப்பூர் தமிழர்களுக்காக மிக மிகச்சிறப்பாக சிங்கப்பூரில் முன் எப்போதும் இல்லாத அளவில் நடைபெற்றது. ஆச்சரியம் என்னவென்றால் !!! இந்தப்பயிலரங்...கில் பள்ளிக்கூட மாணவ மாணவிகள் பெருமளவு பங்கேற்றது குறிப்பிடத்தகுந்த ஒன்று, உலகில் வேறெங்கும் காணாத ஒரு அதிசய ஆனந்தத்தை நான் அங்கே கண்டேன், பயிலரக்குக்கு வந்திருந்த மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர்கள் வந்திருந்ததுடன் அந்த மாணவர்கள் படிக்கும் பள்ளியின் ஆசிரியர்களும் மாணவருக்காக பயிலரங்கில் கலந்துகொண்டது, கற்பனைக்கும் எட்டாத ஒரு நிகழ்ச்சியாக எனக்கு தோன்றியது. சிங்கப்பூரில் ஆசிரியர்களும் ஒவ் ஒரு மாணவரின் தனிப்பட்ட விருப்பங்களுக்கும் முக்கியத்துவம் தந்து அவர்களை ஊக்குவிப்பதைப்பார்க்கும்போது, சிங்கப்பூரின் கல்விக்கொள்கைகளையும், அங்கு பயிலும் மாணவர்களையும், தன்னலமற்ற ஆசிரியர்களையும் நினைத்துப்பார்க்கையில்... ஒவொரு தமிழரும் பாராட்டி பெருமைப்படக்கூடிய ஒன்றாக எனக்கு தோன்றுகிறது. http://youtu.be/VMmNLG7IvEE
Post a Comment

FREE JOBS EARN FROM HOME