FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Saturday, April 20, 2013

"கண்ணில் கழுதை பட்டால் அன்று யோகம் தான்"

"கண்ணில் கழுதை பட்டால் அன்று யோகம் தான்" இது பழமொழி, தமிழ் திரைப்பட வரலாற்றில் கழுதையை மையமாக வைத்து " அக்ரஹாரத்தில் கழுதை மற்றும் பஞ்ச கல்யாணி என இரண்டு திரைப்படங்கள் எடுக்கப்பட்டு எதிர்பார்த்த யோகம் கிடைக்காமல் போனது, கழுதைகளுள் பல வகைகள் உண்டு. அதில் அபூர்வ வகையைச் சார்ந்த கழுதைதான் வெள்ளை மூக்கு கானகக் கழுதை. இந்த வகை "வெள்ளை மூக்கு கானக கழுதைகள்" மிக விரைவாக ஓடிச்செல்லும் விலங்குகளில் இதுவும் ஒன்று. இந்த கழுதையின் சிறப்பம்சமே இதன் வேகம் தான். மணிக்கு 90 கி.மீட்டர் வேகத்தில் ஓடும் திறனுடையது. இவை எச்சரிக்கை உணர்வும், புத்திசாலித்தனமும் மிகுந்தவை. 

பதினொன்றாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் வசித்த சித்தர் ஒருவர் இவ்வகை கழுதைகளை ஆராய்ந்தார், "எப்படி இந்த வகை கழுதைகளுக்கு அத்தனை சக்தி கிடைக்கிறது என்று அந்த வகை கழுதைகள் மேயும் இடங்களுக்கு சென்று அவைகள் உண்ணும் தாவர புல் வகை மூலிகைகளை சேகரித்து அதன் மூலம் பல பலசாலிகளான வீரர்களை உருவாக்கியதாக ஒரு செய்தி உண்டு. அவர் கூறியதாக பிறரால் எழுதிய குறிப்புகளில் அப்படி அவர் காட்டில் தேடியபோது "கண்ணில் கழுதை பட்டால் அன்று யோகம் தான்" என்கிற கூற்று பிறகு பழமொழியாக திரித்து பேசப்பட்டதாக குறிப்புகள் உள்ளது. கானக கழுதையில் பல வகைகள் உள்ளன. லடாக் பகுதியில் காணப்படும் வகை, கட்ச் பகுதியில் உள்ளதைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டதாகும். அவ்வாறே காஷ்மீரில் காண்பது பிரிதொருவகை. இன்று இவ்வினம் ரான் பகுதியில் சுமார் ஐயாயிரம் சதுர கி.மீ. பரப்பளவிலான ஒரு சரணாலயத்தில் மட்டுமே காணப்படுகிறது. நமது பொதி சுமக்கும் கழுதையின் மூதாதையர் இனம் தான் இந்த ஒயில்ட் ஆஸ் என்னும் கானக கழுதை. குறிப்பாக இந்த வகை வெள்ளை மூக்கு கானகக் கழுதை உருவத்தில் சற்று பெரியது. பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் உண்டு. முற்காலத்தில் நமது உள்ளூர் கழுதைகள் துணி மூட்டைகளை சுமந்து கொண்டிருக்கும் போதே இந்த கானகக் கழுதைகள் வடமேற்கு இந்தியப் பகுதியில் சுதந்திரமாய் சுற்றித் திரிந்தன என்று கூறப்பட்டுகிறது.

" எல்லாம் சரிங்க கடவுள் கழுதைக்கு ஏன் தலையில் கொம்பை படைக்கவில்லை?" 

அதற்க்கு மாறாகத்தான் கடவுள் கழுதைக்கு காலில் பலத்தைக் கொடுத்திருக்கிறார்,..... உதய் வாங்கியவர்களை கேட்டுப்பாருங்கள் அதன் பலம் என்ன வென்று தெரியும்.

விடாமல் முயலுங்கள், 
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சிந்திப்போம்! 
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. (புது தில்லி) தற்போது இந்தியாவின் உத்திராகண்ட் மாநிலத்திலிருந்து....

No comments:

FREE JOBS EARN FROM HOME