FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, April 25, 2013

பாட்டியும் பேத்தியும்

மசித்து பிசைந்த "மம்மு" சாதம்
எடுத்து ஊட்ட ஒரு தேக்கரண்டி போதும்
கட்டில் அருகே வந்து,
கண்டிப்பும் கட்டளையும் ஊட்டிவிட,
கண்களில் கண்ணீர் வரக்கண்டு...
காரம்தான் உரைத்ததோ என்று
ஒரு குவளை தண்ணீர் பருகத்தந்து
"சொன்ன பேச்சை கேட்கவேண்டும்
சமுத்தாக சாப்பிடவேண்டும்...என்ன? "
என அதிகார பரிமாறல்களோடு
பழுத்த பழத்திற்கு ஊட்டிவிடும் பிஞ்சுக் கைகள்
பாட்டியும் பேத்தியும்....... (கோகி)

Saturday, April 20, 2013

"கண்ணில் கழுதை பட்டால் அன்று யோகம் தான்"

"கண்ணில் கழுதை பட்டால் அன்று யோகம் தான்" இது பழமொழி, தமிழ் திரைப்பட வரலாற்றில் கழுதையை மையமாக வைத்து " அக்ரஹாரத்தில் கழுதை மற்றும் பஞ்ச கல்யாணி என இரண்டு திரைப்படங்கள் எடுக்கப்பட்டு எதிர்பார்த்த யோகம் கிடைக்காமல் போனது, கழுதைகளுள் பல வகைகள் உண்டு. அதில் அபூர்வ வகையைச் சார்ந்த கழுதைதான் வெள்ளை மூக்கு கானகக் கழுதை. இந்த வகை "வெள்ளை மூக்கு கானக கழுதைகள்" மிக விரைவாக ஓடிச்செல்லும் விலங்குகளில் இதுவும் ஒன்று. இந்த கழுதையின் சிறப்பம்சமே இதன் வேகம் தான். மணிக்கு 90 கி.மீட்டர் வேகத்தில் ஓடும் திறனுடையது. இவை எச்சரிக்கை உணர்வும், புத்திசாலித்தனமும் மிகுந்தவை. 

பதினொன்றாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் வசித்த சித்தர் ஒருவர் இவ்வகை கழுதைகளை ஆராய்ந்தார், "எப்படி இந்த வகை கழுதைகளுக்கு அத்தனை சக்தி கிடைக்கிறது என்று அந்த வகை கழுதைகள் மேயும் இடங்களுக்கு சென்று அவைகள் உண்ணும் தாவர புல் வகை மூலிகைகளை சேகரித்து அதன் மூலம் பல பலசாலிகளான வீரர்களை உருவாக்கியதாக ஒரு செய்தி உண்டு. அவர் கூறியதாக பிறரால் எழுதிய குறிப்புகளில் அப்படி அவர் காட்டில் தேடியபோது "கண்ணில் கழுதை பட்டால் அன்று யோகம் தான்" என்கிற கூற்று பிறகு பழமொழியாக திரித்து பேசப்பட்டதாக குறிப்புகள் உள்ளது. கானக கழுதையில் பல வகைகள் உள்ளன. லடாக் பகுதியில் காணப்படும் வகை, கட்ச் பகுதியில் உள்ளதைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டதாகும். அவ்வாறே காஷ்மீரில் காண்பது பிரிதொருவகை. இன்று இவ்வினம் ரான் பகுதியில் சுமார் ஐயாயிரம் சதுர கி.மீ. பரப்பளவிலான ஒரு சரணாலயத்தில் மட்டுமே காணப்படுகிறது. நமது பொதி சுமக்கும் கழுதையின் மூதாதையர் இனம் தான் இந்த ஒயில்ட் ஆஸ் என்னும் கானக கழுதை. குறிப்பாக இந்த வகை வெள்ளை மூக்கு கானகக் கழுதை உருவத்தில் சற்று பெரியது. பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் உண்டு. முற்காலத்தில் நமது உள்ளூர் கழுதைகள் துணி மூட்டைகளை சுமந்து கொண்டிருக்கும் போதே இந்த கானகக் கழுதைகள் வடமேற்கு இந்தியப் பகுதியில் சுதந்திரமாய் சுற்றித் திரிந்தன என்று கூறப்பட்டுகிறது.

" எல்லாம் சரிங்க கடவுள் கழுதைக்கு ஏன் தலையில் கொம்பை படைக்கவில்லை?" 

அதற்க்கு மாறாகத்தான் கடவுள் கழுதைக்கு காலில் பலத்தைக் கொடுத்திருக்கிறார்,..... உதய் வாங்கியவர்களை கேட்டுப்பாருங்கள் அதன் பலம் என்ன வென்று தெரியும்.

விடாமல் முயலுங்கள், 
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சிந்திப்போம்! 
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. (புது தில்லி) தற்போது இந்தியாவின் உத்திராகண்ட் மாநிலத்திலிருந்து....

சிங்கப்பூரில் தமிழில் சூப்பர் ஹிட் தீபாவளிப்பாடல் இது

{சிங்கப்பூரில் தமிழில் சூப்பர் ஹிட் தீபாவளிப்பாடல் இது}
தீபாவளி வந்தது ....
தோம் தோம் தனன தோம், தனன தோம்
தோம் தோம் தனன தோம், தனன தோம்
தீபாவளி வந்தது ....
...மனதினில் பொங்கும் புது உணர்ச்சி
எங்கும் நிறைந்தின்பம் தரும் மகிழ்ச்சி....
நன்றி...மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்களுடன்.. கோகி. http://youtu.be/OjM3JiIHwUg

செய்துவிடு இல்லையென்றால் இயலாமல் செத்துவிடுவாய் .......

செய்துவிடு இல்லையென்றால் இயலாமல் செத்துவிடுவாய் .......
Solomon Grundy,
Born on a Monday,
Christened on Tuesday,
Married on Wednesday,
Took ill on Thursday,
Grew worse on Friday,
Died on Saturday,
Buried on Sunday.
மனிதனே உன்னுடைய இறுதிக்காலம் அது மிக மிக குறுகியது ஒரு விழாழக்கிழமை அவனது உடல் நிலை சரியில்லாமல் போனது அதற்க்கு அடுத்தநாளே வெள்ளிக்கிழமை மிகவும் மோசமானதால், அடுத்த நாள் சனிக்கிழமை அன்று செத்துப்போனான் அதற்க்கு அடுத்தநாள் ஞாயிறு அன்றே புதைத்துவிட்டார்கள் ஆனால் மனிதனின் இளமைக்காலம் அந்த ஒரு திங்களில் பிறந்தான், அதன் அடுத்த வந்த வருடத்தின் ஒரு செவ்வாய்க்கிழமையில் பெயர் வைக்கப்பட்டு, நீண்ட பல வருடங்களுக்குப்பிறகு ஒரு புதன் கிழமை அவனுக்கு திருமணமானது ஆகா மனிதனே உன்னுடைய இளமைக்காலம் அது நீண்டது அப்போதே உன்னுடைய கடமைகளை செய்துவிடு ....இல்லையென்றால் இயலாமல் செத்துவிடுவாய் .......http://youtu.be/OHEKwGe1Xqg 

இயந்திரக்கோளாறு காரணமாக அந்த வானூர்தி நடுக்கடலில் விழுந்தது.....

தமிழகத்தில் அவள் ஒரு தமிழ் பேராசிரியையாக பணியாற்றியபோதும், அவளது படைப்புக்கள் அவளது பெயரை பறைசாற்றிக்கொண்டிருந்தன. அவளது பெயர் தமிழ் பத்திரிக்கைகளிலும், தமிழ் அவை/சபை மற்றும் தமிழ் மன்றங்களிலும், அரசிதழ்களிலும் (அரசின் மொழிபெயர்ப்பாளர்) சிறந்த மொழிப்பற்றுடயவர் என்று குறிப்பிட்டிருந்தது குறித்து அவளுக்கு மிகுந்த பெருமிதமும்கூட.

புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் மற்றொரு நாட்டிலிருந்து வந்த அன்பு அழைப்பினை ஏற்று அங்கு உரையாட வான்வழிப்பயணம் மேற்க்கொண்டிருந்தபோதுதான் அந்த துயர சம்பவம் நடந்தேறியது. இயந்திரக்கோளாறு காரணமாக அந்த வானூர்தி நடுக்கடலில் விழுந்தது.....


மீட்பு நடவடிக்கயிளிருந்து விடுபட்டு தனது உற்றார் உறவினர்களின் வட்டத்திற்குள் இருந்த அவள் மௌனமாகவே இருந்தால், மிடுக்காக தோற்றமளிக்கும் அவள் அப்போது மிகவும் சோர்வுடன் காணப்பட்டால், அந்த முப்பது நாட்கள் அவளின் மனதில் மிகப்பெரிய மாற்றங்களை எர்ப்படுத்தியிருந்தது. சுற்றியிருந்த பத்திரிக்கை கூட்டமும் அவர்களின் புகைப்பட கருவிகள் கண்சிமிட்டியபடி இருந்தது. வாய்திறந்தால் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் அவள் அன்று மௌனமாகவே இருந்தால், அந்த மௌனமான மொழிதான் தன்னைக் காப்பாற்றியது என்பது இவர்களுக்கு தெரிந்திருந்தால் இப்படி கேள்வி கேட்க்கமாட்டார்கள்.
வாழ்க்கைப்பயனத்திர்க்கு மொழி அவசியம் என்றாலும் மொழிதான் வாழ்க்கை என்றிருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம். இனி இதை உரியமுறையில் அனைவர்க்கும் புரியும் வகையில் கொண்டு சேர்க்கவேண்டும் என்கிற என்னாத்தில் தனது சுற்றமும் நட்பும் சூழ, இல்லம் நோக்கி சென்றுகொண்டிருந்தாள்.

Friday, April 19, 2013

“வயோதிகம்" உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா

“வயோதிகம்" உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை” இந்த வரிகளை கேட்கும்போது தெம்பாகத்தான் இருக்கிறது ஆனால் யதார்த்தம் என்ன? முதியவர்களுக்குரிய தேவைகள் சரிவர நிறைவேற்றப்படுகின்றனவா? இயந்திரமயமாகிய வாழ்க்கை ஓட்டத்தில் இளையவர்கள் சிக்கியதால் முதியவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?உதவியாக இல்லாவிட்டாலும் உபத்திரமாக இருக்காதே...http://youtu.be/vvfLzYCmfug

ஆண்டவனுக்கு நன்றி காட்டுவது நமது கடமை.

உதவி பெற்றதற்கு நன்றி செலுத்துவது ஒரு சிறந்த கடமை. (முகநூளில் ரசித்த பகுதிக்கு ஒரு "LIKE-லைக்" போட்டு விருப்பம் தெரிவிப்பது போல)..... ஒரு சிறு புல்லைக் கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு, இத்தனை உணவும், உடையும் மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி காட்டுவது நமது கடமை. இவ்வாறு நன்றி கூறும் அடையாளமாகவே, நாம் உண்பதை அவனுக்கு முன் காட்டி நிவேதனம் செய்ய வேண்டும். அவனுக்குக் காட்டி விட்டுப் பிறகு நாம் தான் உண்ணப் போகிறோம். நாம் பலவிதமான ஆடை, ஆபரணங்கள் அணிவதற்கு அருள் செய்யும் ஆண்டவனுக்குத் திருவாபரணங்களையும், வஸ்திரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். எல்லாருமே இவ்விதம் வீட்டில் பூஜை செய்து, திரவியங்களை ஈசுவரார்ப்பணம் செய்ய இயலாது. எனவே, சமுதாயம் முழுவதும் சேர்ந்து இப்படி சமர்ப்பணம் பண்ணும்படியான பொது வழிபாட்டு நிலையங்களாக கோயில்கள் எழுந்தன. ஆதியில் மகரிஷிகள் மந்திர சக்தியால் எங்கும் நிறைந்த பரம்பொருளை சில விக்ரஹங்களில் விசேஷ சாந்நித்தியம் கொள்ளச்செய்தனர். அப்படிப்பட்ட மூர்த்திகளைச் சுற்றிக் கோயில்கள் எழுப்பப் பட்டுள்ளன. வீட்டில் பூஜை செய்கிறவர் உள்பட அனைவரும் கோயிலுக்குப் போவது என்று கட்டுப்பாடாகப் பழக்கம் வைத்துக் கொண்டால் தான் அங்கு பூஜைகள் குறைவின்றி நடக்கும். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்னும் புண்ணிய மொழி வழங்கும் நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் கோயில் வழிபாடு நடக்கச் செய்ய வேண்டும். இதுதான் நம் முதல் கடமை. -நன்றி தினமலர் ஆன்மீக வகுப்பறை.
ஞானமும் கல்வியும் நல்லருட் செல்வமும், நம்பினோர்க்கு அருளும் முருகா... நற்பண்பு நல்லறிவு செழிக்கவேண்டும்.... அதை நான் கண்டு மகிழவேண்டும்....
பாடலை கண்ணதாசன் அவர்கள் எழுத கே. வி. மகாதேவன் அவர்கள் இசை அமைத்த "தேவரின் - துணைவன்" படத்திற்காக... http://youtu.be/zPsC1dtyGe

நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வளர்க

இன்று பிறந்தநாள், பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்தநாள்.....HAPPY BIRTH DAY 2 U.... Wish you many happy returns of the day ... மேலும் மேலும் பல வெற்றிகளுடன் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று நீங்களும், உங்களின் உற்றார் உறவினர்கள் மற்றும் குடும்ப நபர்களும், சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்... "நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வளர்க, ஊராண்ட மன்னர் புகழ் போலே, உலகாண்ட புலவர் தமிழ் போலே, நூறாண்டு காலம் வாழ்க "... http://youtu.be/i-jlk4dEFLY
பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்யும் போது, நூறாண்டு காலம் வாழ்க! என்று சொல்லி வாழ்த்துவர். இதற்குள் பெரிய அர்த்தம் புதைந்து கிடக்கிறது. மனிதர்களின் சராசரி வாழ்க்கையில் மனைவி, மக்களின் முன்னேற்றத்திலேயே 60 வயது வாழ்க்கை கழிந்து விடுகிறது. இந்த வயதில், உலக பந்தத்தில் இருந்து விடுபட்டு விட வேண்டும். எனவே இச்சமயத்தில், சஷ்டியப்த பூர்த்தி என்னும் அறுபதாம் கல்யாணம் நடத்துகிறார்கள். இதன்பிறகு கணவன், மனைவி இருவரும் பொறுப்புகளை தங்களுக்கு அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்துவிட வேண்டும். எண்பது வயதுக்குள் இவர்கள் பக்குவமுதிர்ச்சியும் பெற்று விடுவார்கள். இதன் பிறகு நற்கதி அடைய கடவுள் இவர்களுக்கு வழிகாட்டுவார். எனவே சதாபிஷேகம் செய்து கொள்வார்கள். தொண்ணூறு வயது வரை வாழ்ந்தால் அவர்களைப் பிடித்த நவக்கிரக தோஷங்கள் அகன்று விடும் என்பார்கள். நூறு வயது வரை வாழும் வாய்ப்பு கிடைத்தால், கடவுளுடன் மனிதன் ஒன்றிப் போவான். சாப்பிடுவது, உறங்குவது, உணர்வது, பார்ப்பது, நடப்பது எல்லாமே இறைவனுக்குள் ஒடுங்கிப் போகும். அதாவது இவற்றை செய்யும் ஐம்புலன்களும் அடங்கிப் போகும். இப்படி இறைவனுக்குள் அடங்கிப் போகிறவர்கள் மீண்டும் பிறவியெடுக்கமாட்டார்கள் என்பது ஐதீகம். இதன் அடிப்படையில் தான் நூறாண்டு காலம் வாழ்க! என்று சொல்லி வாழ்த்துகிறார்கள் -நன்றி தினமலர் ஆன்மீக வகுப்பறை.

தை பூசம் அன்று பெங்களூர் ரமணி அம்மாள்

தை பூசம் அன்று பெங்களூர் ரமணி அம்மாள் அவர்களின் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது, அதைக்கேட்ட ஒரு குழந்தை பாடுபவர் ஒளவை பாட்டி போன்று இருப்பவர்தானே என்று கேட்டனர். நான் அவரில்லை என்று கூறியதும்.... அவர் எப்படி இருப்பார் என்று கேட்டனர், உடனே இந்த திரைப் பாடல் ஞாபகம் வரவே, எனது கைப்பேசியில் இந்த பாடலை ஓடவிட்டு இதோ பாடிக்கொண்டிருப்பவர்தான் பெங்களூர் ரமணி அம்மாள் என்றேன்."பாடல் -குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்"  எதிர் வரும் சந்ததியினருக்கு சில திரைப்பாடல்கள் சரித்திர சான்றாக உள்ளது மகிழ்ச்சியான செய்தி. http://youtu.be/Vrv0Gv463Uw

குழந்தைகளுக்கு பத்து வயது பூர்தியாகும்போதே ஏதாவது ஒரு வங்கியில் இளையவர் வங்கிக்கணக்கை துவங்கிவிடுங்கள்

உங்களின் குழந்தைகளுக்கு பத்து வயது பூர்தியாகும்போதே ஏதாவது ஒரு வங்கியில் இளையவர் வங்கிக்கணக்கை துவங்கிவிடுங்கள். காரணம் உயர் கல்வி படிப்பிற்கு தேவையான தொகை கிடைக்காதபோது நீண்ட நாட்கள் வங்கி கணக்கை வைத்திருந்த தகுதியின் அடிப்படையில் உங்களின் மகள்/மகனுக்கு அதே வங்கியில் உடனே கல்விக்கடன் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதாவது 18 வயதிற்கு பிறகு உங்களின் மகள்/மகன் படிப்பு செலவுக்கு உங்களை சார்ந்து இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை, அவர்களாகவே கல்விக்கடன் பெற்று அவர்களின் விருப்பப்படி படிக்க முடியும். அவர்களின் காலில் அவர்களே நிலைத்து நிற்கும் பொறுப்புள்ளவர்களாக உங்கள் பிள்ளைகளும் இப்படிப்பாடுவார்கள் "எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்...வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே". http://youtu.be/geYyN5_QYKg

குறைந்த செலவில் மிக விரைவிலும் எளிதாகவும் வேலைவாய்ப்பை பெரும் கல்வி


#கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு... மேல்நிலை படிப்பு என்று வரும்போதே என்ன படிப்பது என்று மாணவ மாணவியரும், என்ன படிக்கவைகலாம் என்று பெற்றவர்களும் சிந்தனை செய்யத்தொடங்கிவிடுகின்றனர். தற்போதைய நிலையில் படிப்பு என்றாலே மிகப்பெரிய தொகையை செலவு செய்யவேண்டி கட்டாயம் உள்ளது. கடன் பெற்று செய்த கல்வி செலவுகள் எத்தனை விரைவாக கடனையும் அடைத்து குடும்பத்திற்கும் உபயோகமாக சம்பாதிக்கமுடியும் என்பதில் எவருக்கும் ஒரு

தீர்கமான முடிவோ சிந்தனை இல்லை என்பதுதான் உண்மை. இப்படிப்பட்ட சூழலில்தான்..தற்போதைய கல்விக் கண்காட்சியிலும, மற்றும் பல நிறுவனங்களின் [Campus interview] கல்லூரியில் நேர்காணலின்போதும் அனைத்து மாணவர்களுக்கும் இதை எதிர்கொள்வது எப்படி என்பதை கூறிவருகிறேன். குறைந்த செலவில் மிக விரைவிலும் எளிதாகவும் வேலைவாய்ப்பை பெரும் கல்வியாக கீழ்வரும் 5 பாடப்பிரிவுகள் உள்ளது குறிப்பிடத்தக...்கது.

1. வணிகவியல் (Commerce) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் மூன்று ஆண்டுகள் கல்லூரி பட்டப் படிப்பையும் முடித்தாலே போதுமானது-மேற்கொண்டு வேலையில் சம்பாதித்துக்கொண்டே படித்துக்கொள்ளலாம்) 5years course of BCOM-BL, or FICA, BCS...போன்றவை....

2. மருத்துவ செவிலியர் (Nursing) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் மூன்று ஆண்டுகள் கல்லூரி பட்டப் படிப்பையும் முடித்தாலே போதுமானது அல்லது பட்டயப்படிப்பை(Diploma) படித்தாலும் போதும்)

3. கணினிக்கல்வி (Computer) (பல்வேறு விதமான கணினி சார்ந்த பட்டய மற்றும் உயர் பட்டப் படிப்புகள் )

4. ஆசிரியர் பயிற்சி.(Teachers Training)

5. சட்டக்கல்வி (Law) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் 5 ஆண்டு சட்டக் கல்வி அல்லது ஒரு சிறு சட்டம் சார்ந்த பட்டயப்படிப்பை(Diploma) படித்தாலும் போதும், தனியார் பணியிடங்களில் அதிக வேலைவாய்ப்புகள் நிறைந்திருக்கும் கல்வி இது)

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு... வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு http://youtu.be/qvCDPf1_Qeg

"EXCHANGE OFFER -ஒரு உண்மை உயிர்த்தெழுகிறது"

"EXCHANGE OFFER -ஒரு உண்மை உயிர்த்தெழுகிறது" பொறியியல் கவுன்சிலிங் முடித்து தான் ஆசைப்பட்ட கல்லூரியை தேர்வு செய்த திருப்தியுடன் வெளியே வந்தாள் கஸ்தூரி. ஆட்டோ ஓட்டி தன் மகளை பொறியியல் கல்லூரி வரைக்கும் கொண்...டு வந்த திருப்தியுடன் கந்தசாமியும் இருந்தார். ஆனாலும் இன்னும் நான்கு வருடங்களுக்கு செலவு செய்ய வேண்டிய தொகை ரொம்பவே பயமுறுத்தத்தான் செய்தது. கவுன்சிலிங் நடந்த ஹாலை விட்டு வெளியே நடந்து வந்து கொண்டிருந்த போது "எக்ஸ்கியூஸ்மீ" என்ற குரல் கேட்க இருவரும் திரும்பினர். அழைத்தது ஒரு பெண். "உங்களிடம் கொஞ்சம் பேசலாமா" என்று கேட்டுக்கொண்டே அருகிலிருந்த காருக்கு அருகில் அழைத்தாள். கந்தசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் கஸ்தூரியை அழைத்துக் கொண்டு அருகில் சென்றார். தன்னை மதுமதி என்று அறிமுகம் செய்து கொண்ட அந்த பெண்மணி கந்தசாமியின் முழு பயொடேட்டாவையும் இவரிடமே சொல்ல இவருக்கு தூக்கி வாரிப் போட்டது.... ஆனாலும் அந்த பெண்மணி சொன்ன டீல் கந்தசாமிக்கு கொஞ்சம் கிறங்கடிக்கத்தான் செய்தது. கஸ்தூரி தேர்வு செய்திருந்த முதல் தர வரிசை கல்லூரியின் பிரதிநிதியான அந்த பெண்மணி சொன்ன டீல் என்ன தெரியுமா? தங்களுக்கு சொந்தமான புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த இன்னொரு கல்லூரியில் சேரும்படியும் அதற்கு பிரதிபலனாக நான்கு வருடங்களுக்கான மொத்த கல்விக் கட்டணத்தையும் கல்லூரியே ஏற்றுக் கொள்வதுடன் ஒரு கணிசமான தொகையும் கையில் தருவதாக சொன்னார்.

இங்கே விஷயத்துக்கு வருவோம். கஸ்தூரி முதலில் தேர்வு செய்த கல்லூரியில் அவள் தேர்வு செய்த பிரிவின் விலை சுமார் 12 லட்சம். அதனை அவள் சேராமல் விட்டு விட்டால் அந்த இடம் கல்லூரி கோட்டாவுக்கே போய் சேர்ந்து விடும். பின் அவர்கள் அதனை கவுன்சிலிங் முடிந்தவுடன் காலி இடமாக காட்டி இன்னும் அதிக விலைக்கு விற்று விடுவார்கள். ஆனால் இந்த நான்கு வருடங்களில் கஸ்தூரிக்கு அவர்கள் கட்டும் கட்டணம் சுமார் 4 லட்சம் என்றும் கையில் கொடுத்த தொகை 2லட்சம் என்றே வைத்துக் கொண்டாலும் கல்லூரி முதலாளிக்கு கிடைத்த லாபம் 7லட்சம் மற்றும் அதற்கு மேல். கஸ்தூரியும் ஒரு வழியாக எந்த செலவும் இல்லாமல் இந்த ஆண்டு இறுதியாண்டினை படித்துக்கொண்டிருக்கிறாள். பல்கலைக் கழக அளவில் தரவரிசையிலும் இடம் பிடித்திருக்கிறாள். இந்த EXCHANGE OFFER சூப்பரா இருக்கில்ல...........சட்டம் போட்டு தடுக்குர கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது......திட்டம் போட்டு திருடுர கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது........

நீங்கள் 6அடுக்கு அல்லது அதற்கும் மேற்ப்பட்ட, அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் என்றால்

நீங்கள் 6அடுக்கு அல்லது அதற்கும் மேற்ப்பட்ட, அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் என்றால் இது உங்களுக்கு மிகவும் பயன்படும். திடீரென்று அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பவருக்கு மருத்துவ மற்றும் வேறுவித அவசர உதவி தேவைப்படும் நேரத்தில் மின் தூக்கியை பயன்படுத்தும்போது இடையில் பல இடங்கள் நின்று போகுமாறு ஏற்க்கனவே மின்தூக்கி விசைப்பலகையில் (LIFT SWITCH) சமிக்கைகள் தரப்பட்டிருந்தால் அவற்றை நீக்க, விசைப்பலகையின் ஏதாவது இரண்டு பொத்தான்களை உதாரணத்திற்கு என் 4 மற்றும் 6 ஆகிய பொத்தான்களை அழுத்திக்கொண்டு மூன்றாவதாக வேறு ஒரு என்னை, 2 அழுத்தினால் ரீசெட்(RESET) என்கிற முறையில் அனைத்து தளங்களிலும் நிற்கவேண்டிய சமிக்கைகள் நீக்கப்பட்டுவிடும். உடனே நீங்கள் செல்லவேண்டிய மாடி-குடியிருப்பு தளத்தின் என்னை மட்டும் அழுத்தினால் அந்த இடத்திற்கு மட்டும் மின்தூக்கி இயங்கும் . இதை அவசர கால உதவிக்குமட்டும் பயன்படுத்துங்கள் ....

அரசர் மெச்சிய பரிசு!


அரசர் மெச்சிய பரிசு!

அரசருக்கு பிறந்தநாள் என்பதால் மக்களிடையே பெரும் சந்தோஷம் நிரம்பியிருந்தது. அரசர் அளித்த அறுசுவை உணவை வயிறார உண்டு, அரசரை வாழ்த்த மக்கள் காத்திருந் தார்கள். அரசருக்குப் பரிசளிக்க தங்களால் இயன்ற பொருட்களை கொண்டு வந்திருந்தார்கள்.
அங்கு அரசர் வந்தார்...

... ஒவ்வொருவராக பரிசுகளை அளித்து வணங்கிச் சென்றனர். பிறகு அரசர் அவர்கள் அளித்த பரிசு பொருட்களை கண்ட பிறகு, மக்களைப் பார்த்து... "நீங்கள் அன்புடன் எனக்கு பரிசுகளை அளித்து கௌரவித்தீர்கள். நன்றி... அவற்றில் மிக மிகச் சிறந்த பரிசு ஒன்றைக் கண்டேன்" என்று நிறுத்தினார். இதைக் கேட்ட மக்களுக்கு ஆவலாக இருந்தது. ‘அந்த உயர்ந்த பரிசு எது? யார் அளித்திருப்பார்கள்?’ தங்களுக்குள் முணுமுணுத்தார்கள்.

"நான் கொடுத்த மாணிக்கக்கல்லாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் உலகில் அதைப்போல் வேறொன்றைக் காணமுடியாது" என்றான் மாணிக்க வியாபாரி.

இதைக் கேட்ட வைர வணிகரோ,"உலகின் தலைசிறந்த வைரம். அதற்கு ஈடு இணை எதுவும் கிடையாது. எனவே என்னுடையதுதான் சிறந்த பரிசாக இருக்க முடியும்" என்று கூறினார்.

அதற்கு நெசவாளி... "நான் அரும்பாடுபட்டு நெய்து அளித்த பட்டாடைகள் மேலை நாடுகளில் கூட கிடைக்காது. அதைத்தான் மன்னர் சொல்லி இருப்பார்" என்றார். இவர்கள் பேசுவதைக் கேட்ட பூக்காரி... "ஆடையோ, ஆபரணங்களோ அரசரைக் கவர்ந்திருக்க முடியாது. நான் புத்தம் புதிய மலர்களை வண்ணமிகு மாலையாக்கி அரசருக்கு அளித்தேன். வாசம் மிகுந்த மென்மையான மலர் மாலையை விடவும் சிறந்தது உண்டோ? இதைத்தான் அவர் குறிப்பிட்டிருக் கிறார்" என்றாள்.

இப்படி ஒருவருக்கொருவர் தாங்கள் அளித்த பரிசைத்தான் அரசர் மெச்சியிருக்கிறார் என்று பேசிக்கொண்டனர். இந்த சலசலப்பைக் கேட்ட பிறகு அரசரே பதில் கூற ஆரம்பித்தார். "எல்லா பரிசுகளும் சிறந்தவையே. இதில் என்னை மிகவும் கவர்ந்த பரிசு, காலத்துக்கும் நிலைத்து நிற்கக்கூடியது. எல்லோருக்கும் பலன் தரக்கூடியது. அதுதான் இது..."என்று ஒரு சிறிய மரக் கன்றைக் காட்டினார்.

"பொன்னையும் பொருளையும் சேமிப்பதைவிட உயிருள்ள மரங்களையும் செடிகளையும் சேமிப்பதே புத்திசாலித்தனம்" என்று கூறி மரக்கன்றை பரிசளித்த விவசா யியை மெச்சி, அரசர் பரிசளித்துப் பாராட்டினார்.

"மாணவர்களுக்கு தன்நம்பிக்கையையும் சேர்த்து கற்ப்பிக்கும் சிறப்பான கல்வி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்"


"மாணவர்களுக்கு தன்நம்பிக்கையையும் சேர்த்து கற்ப்பிக்கும் சிறப்பான கல்வி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்" இன்றைய பார்வை.....சிங்கப்பூரிலிருந்து கோகி ....உலகளாவிய தமிழர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளும் அளவிற்கு, ஏப்பரல் மாதம் முழுதும் சிங்கப்பூரில் தமிழ் மாதமாக கொண்டாடப்படுகிறது. ஒன்றல்ல இரண்டல்ல... தினமும் பல தமிழ் மொழி இலக்கியம் சார்ந்த நிகழ்சிகள்...மாதம் முழுவதும் கொண்டாடப்படுவது ஒவொரு தமிழரும் பெருமைப்படக்கூடிய ஒன்று, நேற்றைய நிகச்சி ஒன்றில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது, வலர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில், தங்கமீன் வாசகர்கள் மன்றத்தின் ஏற்பாட்டில், எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் திரு ஞாநி அவர்களின் "திரைக்கதைப் பயிலரங்கப் பயிற்சி ஒன்றை சிங்கப்பூர் தமிழர்களுக்காக மிக மிகச்சிறப்பாக சிங்கப்பூரில் முன் எப்போதும் இல்லாத அளவில் நடைபெற்றது. ஆச்சரியம் என்னவென்றால் !!! இந்தப்பயிலரங்...கில் பள்ளிக்கூட மாணவ மாணவிகள் பெருமளவு பங்கேற்றது குறிப்பிடத்தகுந்த ஒன்று, உலகில் வேறெங்கும் காணாத ஒரு அதிசய ஆனந்தத்தை நான் அங்கே கண்டேன், பயிலரக்குக்கு வந்திருந்த மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர்கள் வந்திருந்ததுடன் அந்த மாணவர்கள் படிக்கும் பள்ளியின் ஆசிரியர்களும் மாணவருக்காக பயிலரங்கில் கலந்துகொண்டது, கற்பனைக்கும் எட்டாத ஒரு நிகழ்ச்சியாக எனக்கு தோன்றியது. சிங்கப்பூரில் ஆசிரியர்களும் ஒவ் ஒரு மாணவரின் தனிப்பட்ட விருப்பங்களுக்கும் முக்கியத்துவம் தந்து அவர்களை ஊக்குவிப்பதைப்பார்க்கும்போது, சிங்கப்பூரின் கல்விக்கொள்கைகளையும், அங்கு பயிலும் மாணவர்களையும், தன்னலமற்ற ஆசிரியர்களையும் நினைத்துப்பார்க்கையில்... ஒவொரு தமிழரும் பாராட்டி பெருமைப்படக்கூடிய ஒன்றாக எனக்கு தோன்றுகிறது. http://youtu.be/VMmNLG7IvEE

என் வீட்டு தோட்டத்தில் காய்த்த ஒரே ஒரு வேண்டைக்காயாக இருந்தாலும் அதில் செய்யும் சாம்பாரின் மனமும் சுவையும் வேறு எந்த சாம்பாரிலும் கிடைப்பதில்லை,

இன்றைய பார்வை:- உலகளாவிய தாவரவியல் பூங்காவில், சிங்கப்பூரின் தாவரவியல் பூங்காவும் "சிறந்த தாவரவியல் பூங்கா" என்கிற சிறப்பு மதிப்பை பெறுகிறது. இதை மேலும் சிறப்படயசெய்வது சிங்கப்பூரின் ஒவொரு குடிமக்களின் கடமையாகும். என்னுடைய தாத்தா (அப்பப்பா).... காலம் சென்ற திரு எஸ் .கிருஷ்ணா சுவாமி ஐயர் அவர்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவின் உயர் அதிகாரியாக
Ooty (Nilgiri hills) Botanical garden superintendent இருந்தபோது (1925) பிரிடிஷ் அரசாங்க உதவியுடன் மலர் கண்காட்சியை மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்டு உலக அளவில் பேசப்பட்டது. இன்றளவும் ஒவொரு ஆண்டும் நடக்கும் மலர் கண்காட்சிக்கு எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கென்று சிறப்பு அழைப்பு வருகிறது. என்னுடைய பாட்டி (அப்பம்மா) 1979 வரை தாத்தாவின் அரசாங்க ஓய்வூதியத்தைப் பெற்றுவந்தார். இயற்கையை நேசிக்க நாம் ஒவொரு நாளும் ஒரு சில மணி நேரமாவது ஒதுக்க வேண்டும், என் வீட்டு தோட்டத்தில் காய்த்த ஒரே ஒரு வேண்டைக்காயாக இருந்தாலும் அதில் செய்யும் சாம்பாரின் மனமும் சுவையும் வேறு எந்த சாம்பாரிலும் கிடைப்பதில்லை, தாவரங்களை நேசிக்க பழகுங்கள். தாவரங்கள் நமது அன்பை புரிந்துகொண்டு நம்மிடம் பேசும், அந்த உன்னதமான ஸ்பரிசத்தை உங்களாலும் உணரமுடியும். முயற்சி செய்யுங்கள் அதனால் கிடைக்கும் ஆனந்தம் வேறு எதிலும் கிடைக்காத சிறந்த மகிழ்ச்சி அது, அதை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும். http://youtu.be/cu-2yxYL06w

காக்கா பாட்டியிடமிருந்து வடையை திருடவில்லை. பாட்டிதான் தினமும் முதல் வடையை காக்கைக்கு வைப்பது வழக்கம்

காக்கா பாட்டியிடமிருந்து வடையை திருடவில்லை. பாட்டிதான் தினமும் முதல் வடையை காக்கைக்கு வைப்பது வழக்கம் ஆகவே அந்த கதையில் திருட்டு என்பது இல்லை ஆனால் தந்திர நரிதான் ஏமாற்றுகிறது என்றும்....எனவே ஏமாறுவதுதான் தவறு என்று கதை கருத்து கூறுகிறது...... http://youtu.be/sKvIu_iS3y0

25வது ‌திருமண நாளை‌க் கொ‌ண்டாடிய த‌ம்ப‌தி‌யினரை‌ப் ப‌ற்‌றி

திருமண வா‌ழ்‌க்கையை எ‌ந்த ‌பிர‌ச்‌சினை‌யு‌ம் இ‌ல்லாம‌ல் 25வது ‌திருமண நாளை‌க் கொ‌ண்டாடிய த‌ம்ப‌தி‌யினரை‌ப் ப‌ற்‌றி அ‌றி‌ந்த அ‌ந்த ஊ‌ர் செ‌ய்‌தியாள‌ர் ஒருவ‌ர், அவர்களைப் பே‌ட்டி‌க் க‌ண்டு ப‌த்‌தி‌ரி‌க்கை‌யி‌ல் ‌பிரசு‌ரி‌க்க ‌விரு‌ம்‌பினா‌ர்.

... நேராக அ‌ந்த த‌ம்ப‌திக‌ளிட‌ம் செ‌ன்று, 25ஆ‌ம் ‌திருமண நாளை‌ ஒ‌ற்றுமையாக‌க் கொ‌ண்டாடுவது எ‌ன்பது பெ‌ரிய ‌விஷய‌ம். இது உ‌ங்களா‌ல் எ‌ப்படி முடி‌ந்தது. உ‌ங்களது ‌திருமண வா‌ழ்‌‌வி‌ன் வெ‌ற்‌றி ரக‌சிய‌ம் எ‌ன்ன எ‌ன்று கே‌ட்டா‌ர்.

இ‌ந்த கே‌ள்‌வியை கே‌ட்டது‌ம், அ‌ந்த கணவ‌ரு‌க்கு தனது பழைய தே‌னிலவு ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் ‌நினைவு‌க்கு வ‌ந்தது. "நா‌ங்க‌ள் ‌திருமண‌ம் முடி‌ந்தது‌ம் தே‌னிலவு‌க்காக ‌ஒரு ரம்மியமான மலைப்பகுதிக்கு செ‌‌ன்றோ‌ம். அ‌ங்கு எ‌ங்களது பயண‌ம் ‌சிற‌ப்பாக அமை‌ந்தது. அ‌ப்பகு‌தியை சு‌ற்‌றி‌ப் பா‌ர்‌க்க நா‌ங்க‌ள் கு‌திரை ஏ‌ற்ற‌ம் செ‌ல்வது எ‌ன்று ‌தீ‌ர...்மா‌னி‌த்தோ‌ம். அத‌ற்காக இர‌ண்டு கு‌திரைகளை‌த் தே‌ர்‌ந்தெடு‌த்து, இருவரு‌ம் ஒ‌வ்வொரு கு‌‌திரை‌யி‌ல் ஏ‌றி‌க் கொ‌ண்டோ‌ம். எ‌னது கு‌திரை ‌மிகவு‌ம் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தது. ஆனா‌ல் எ‌ன் மனை‌வி செ‌ன்ற கு‌திரை ‌மிகவு‌ம் குறு‌ம்பு‌த்தனமானதாக இரு‌ந்தது. ‌திடீரென ஒரு து‌ள்ள‌லி‌ல் எ‌ன் மனை‌வியை ‌அது கீழே‌த் த‌ள்‌ளியது. அவ‌ள் ‌‌கீழே இரு‌ந்து எழு‌ந்து சுதா‌ரி‌த்து‌க் கொ‌ண்டு அ‌ந்த கு‌திரை‌யி‌ன் ‌மீது ‌மீ‌ண்டு‌ம் ஏ‌றி அம‌ர்‌ந்து கொ‌ண்டு, "இதுதா‌ன் உன‌க்கு முத‌ல் முறை" எ‌ன்று அமை‌தியாக‌க் கூ‌றினா‌ள்.‌ சி‌றிது தூர‌ம் செ‌ன்றது‌ம் ‌மீ‌ண்டு‌ம் அ‌ந்த கு‌திரை அ‌வ்வாறே செ‌ய்தது. அ‌ப்போது‌ம் எ‌ன் மனை‌வி ‌மிக அமை‌தியாக எழு‌ந்து கு‌திரை‌யி‌ன் ‌மீது அம‌ர்‌ந்து கொ‌ண்டு "இதுதா‌ன் உன‌க்கு இர‌ண்டா‌ம் முறை" எ‌ன்று கூ‌றியவாறு பய‌ணி‌க்க‌த் தொட‌ங்‌கினா‌ள்.

மூ‌ன்றா‌ம் முறையு‌ம் கு‌திரை அ‌வ்வாறு செ‌ய்தது‌ம், அவ‌ள் வேகமாக அவளது கை‌த்து‌ப்பா‌க்‌கியை எடு‌த்து அ‌ந்த கு‌திரையை சு‌ட்டு‌க் கொ‌ன்று‌வி‌ட்டா‌ள்!!!

இதை‌க் க‌ண்டு அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்த என‌க்கு ‌மிகவு‌‌ம் கோப‌ம் வ‌ந்து‌வி‌ட்டது. நா‌ன் அவளை ‌தி‌ட்டினே‌ன். "ஏ‌ன் இ‌ப்படி செ‌ய்தா‌ய்? ‌நீ எ‌ன்ன மு‌ட்டாளா? ஒரு ‌வில‌ங்கை‌க் கொ‌ன்று‌வி‌ட்டாயே? அ‌றி‌வி‌ல்லையா?" எ‌ன்று கே‌ட்டே‌ன்.

அவ‌ள் ‌மிகவு‌ம் அமைதியாக எ‌ன்னை‌ப் பா‌ர்‌த்து, "இதுதா‌ன் உ‌ங்களு‌க்கு முத‌ல் முறை" எ‌ன்றா‌ள். அ‌வ்வளவுதா‌ன். அத‌ன்‌பிறகு எ‌ங்களது வா‌ழ்‌க்கை ‌மிகவு‌ம் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌க்‌கிறது எ‌ன்றா‌ர் கணவ‌ர். !!!

புவியின் மேற்பகுதி அதன் சுழற்சியோடு கிழக்கு நோக்கி நகர்கிறது

இன்றைய பார்வையில்(18-4-2013)-புவியின் மேற்பகுதி அதன் சுழற்சியோடு கிழக்கு நோக்கி நகர்கிறது:- பூமியின் மேற்ப்பரப்பில் அமைந்துள்ள பாரைத்தட்டுகள் நகர்கின்றன என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சென்ற இரண்டு வாரங்களாக உலகின் பல பகுதிகளில் நடந்த பூமி அதிர்வுகள் மேலும் அதை உறுதிபடுத்தும்படி அமைந்துள்ளது. ஆசிய கண்டத்தின் பூமத்தியரேகைக்கு மேற்பகுதி மற்றும் கீழ் பகுதி என பல பாறை அடுக்குகளால் ஆனது என்றும், இதில் எந்த ஒரு பாறை தட்டும் நகரும்போது அதனால் ஏற்ப்படும் இடைவெளியை மற்றொரு பாறை தட்டு நகர்ந்து சரிசெய்யும் என புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜப்பானில் நில அதிர்வு உணரப்பட்டதும் அடுத்த சில வாரங்களில் ஆசிய பாறைத் தட்டுகளின் கிழக்கு பகுதியான இந்தோனேசியா அல்லது மேற்கு முனையான ஆப்கனிஸ்தான் மற்றும் வளைகுடா பாரைத்தட்டுகள் பகுதியில் எதிரொலிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, நேற்றைய ஈரான் பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட கடுமையான நில அதிர்வும் இன்று விடியற்காலையில் ஏற்ப்பட்ட இந்தோனேசியா நில அதிர்வும் அதை உறுதிப்படுத்தின.
"உலகே மாயம் வாழ்வே மாயம்" http://youtu.be/skjJMsSCosQ

Biscuit என்கிற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அகராதியில் "பிஸ்கோத்து"

Biscuit என்கிற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அகராதியில் "பிஸ்கோத்து" என்றிருந்தது... பிஸ்கோத்து. பள்ளிகூட நாட்களில் மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ்-தின்பண்ட வகையில் Britannia little hearts biscuit முதல் பத்து இடங்களுக்குள் வந்துவிடும். என் பாட்டி கதை சொல்லும்போது அந்தக்காலத்தில் (1890) பள்ளிக்கூடத்தில் "கண்ணன் தின்னும் பண்டம் எது? என்று கேட்க அதற்க்கு மாணவர்கள் "மிட்டாய்" , மம்மு-சாதம், வடை என பதில் சொல்ல அதற்க்கு ஆசிரியர், கண்ணன் தின்னும் பண்டம் "வெண்ணை" என சொல்லிக்கொடுப்பாரம்... இதைகேட்ட குழந்தையாக இருந்த எனக்கே சிரிப்பு வந்ததென்றால், வரும்காலத்து அதாவது பேரக் குழந்தைகள் கேட்கவே வேண்டாம்... "இதுகூட தெரியாதா" என நிச்சயம் கிண்டலடிப்பார்கள். http://www.youtube.com/watch?v=jDddCYusDRg&feature=share&list=SPF2514C5A53D7D360

“Double the volume of Business-Award -2002”

எனக்குமட்டும் யோசிக்க இன்னும் சிறிது நேரம் தாருங்கள், மேலும் சிறப்பாக செய்யமுடியும் என்றேன் "அதை சரியாக புறிந்துகொள்ளாத நிறுவனத்தின் உரிமையாளர் "வேலையை விட்டுவிட்டு உன் வீட்டிற்கு சென்று உட்கார்ந்து யோசி என்றார்" எனக்கு வந்த கோபத்தை செயலில் காட்டினேன்... அடுத்த சில நாட்களிலேயே அவருக்கு புரியும் படி ஒரு நாளின் 24மணி நேர உற்பத்தியை, அதே 24மணி நேரத்தில் (ஒருநாளின்) 32மணிநேர உற்பத்தியாக்கி -லாபத்தை செயலில் செய்து காட்டியபோது அசந்த்துபோனார்கள்" நான் அவர்களிடம் சொன்னது நிறுவனம் எனக்கு சம்பளம் தரவில்லை நான்தான் நிறுவனத்திற்கு தருகிறேன் என்றேன், அதோடு நான்மட்டுமில்லாமல் என்னுடைய குழுவினரும் கூட அப்படித்தான் என்றேன் . "நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், இரட்டிப்பாக்குவது எப்படி என்று சிந்தியுங்கள் பல உண்மைகள் உங்களுக்கும் புரியும்" கோகி.... “Double the volume of Business-Award -2002” GoKi.

ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படுமாறு அமைந்தது மகிழ்ச்சியான ஒன்று.

அது 2004 பிப்ரவரி மாதம் எனது மகள்,மகன் இருவரும் ஒரே மாதத்தில் பிறந்தநாள் வரும், 4நாட்கள் வித்தியாசத்தில் பிறந்தவர்கள் (24 & 28 பிப்)ஆகவே இருவருக்கும் சேர்ந்து ஒரே நாளில் (24 அல்லது 28 இல் ) பிறந்தநாள் கொண்டாட்டம் நடப்பது வழக்கம். இரண்டு வாரத்திற்கு முன்பிருந்தே அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது நான் என் மகளிடம் உனக்கு பரிசுப்பொருட்கள் வரும் பொது மகிழ்ச்சிதானே என்று கேட்க அவளும் ஆமாம் என்றால. இந்த வருடம் அதை சற்று மாற்றி நீ மற்றவருக்கு பரிசு தந்தாள் எப்படி, என்று கூற... நன்றாக இருக்கிறதே என்ன செய்யலாம் என்று சிந்திக்க ஆரம்பித்துவிட்டால், இடையில் புகுந்த நான் நிறைய பேனா பென்சில் நோட்டு புத்தகம் போன்ற பொருட்களை வாங்கி எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் அரசு ஆரம்ப பள்ளிக்கு சென்று ஏழை மாணவ மாணவியருக்கு அந்த பொருட்களை தந்தாள் எப்படி என்று கேட்க, அதுவே சரி என்று முடிவானது. எனது மகளும் மகனும் அன்றிலிருந்தே சிறுக சிறுக பொருட்களை வாங்கி சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள், அருகே இருந்த பள்ளியைப்பற்றி விசாரித்தபோது 500க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர்கள் படிப்பதாக தெரிந்தது, எங்கே நம்முடைய பரிசுப்பொருட்கள் மிகவும் குறைவாக போதுமான அளவில் இருக்காதோ என்று நினைத்துக்கொண்டிருந்தபோது நண்பர்களிடம் இது பற்றி பேசிக்கொண்டிருந்தேன் சரியாக இரண்டு நாட்கள் இருந்தபோது ஒரு லாரி நிறைய பள்ளிக்கூட மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்களுடன் புத்தகப்பை உட்பட வீட்டின் முப்பு வந்திறங்கியதைப் பார்த்ததும் எங்கள் அனைவருக்கும் ஆச்சிரியமாகிவிட்டது. இரண்டு முன்னணி வர்த்தக நிறுவனத்திலிருந்து வந்திருந்த அந்த பரிசுப் பொருட்களுடன் ஒரு கடிதமும் இருந்தது. அந்தக்கடிதத்தில் உங்கள் குழந்தைகள் அவர்களின் பிறந்தநாளை கொடாட வகுத்த திட்டங்கள் எங்களின் நிறுவனத்தை மிகவும் கவர்ந்தது, ஆவகே எண்களின் நிறுவனம் அவர்களை பாராட்டி வாழ்த்துவதோடு, அவர்கள் செய்யும் சேவையில் இந்த பரிசுப்பொருட்களையும் இணைத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டிருந்தது. அதற்க்கு அடுத்த ஆண்டிலிருந்து இரண்டு நிறுவனம் என்பது மாறி 4,5 என நிறுவனக்கள் போட்டி போட்டுக்கொண்டு அவகளின் விளம்பரத்திர்க்காவவும் பரிசுகளை குவிக்கத்தொடகினார்கள். எது எப்படியோ சிறு துளி பேரு வெள்ளம் போல ஒரு சிறிய எண்ணம் மிகப்பிரிய வரவேற்ப்பை பெற்றதோடு ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படுமாறு அமைந்தது மகிழ்ச்சியான ஒன்று.

உலக வர்த்தக வரலாற்றில், இரண்டே வாரங்களில் 25% அசுரவளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிற

இன்றைய பார்வையில், இது ஒரு ஆராய்ச்சியின் குட்டி (கொசுறு) உங்களுக்காக:- உலக வர்த்தக வரலாற்றில், இரண்டே வாரங்களில் 25% அசுரவளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிற (Mar-2013)ஜப்பானிய நாணய "என்" பல வர்த்தக ஆராய்ச்சி வல்லுனர்களின் கவனத்தை கவர்ந்திழுத்திருக்கிறது. ஜப்பானின் மிக அருகே இருக்கும் வடகொரியாவில் வன்மம் எந்தநேரமும் வெடிக்கலாம் (அங்கு இன்னும் இரண்டு நாளில் பிறந்தநாள் கொண்டாட்டம் வேறு பல விளைவுகளுக்கு அடிபோட்டுக்கொண்டிருக்கிறது) இப்படிப்பட்ட ஒரு கவலையான சூழ்நிலையில் மேலும் பல நாடுகளில் உலக வர்த்தகம் சரிந்திருக்கிற இந்த நேரத்தில், இப்படி ஒரு அபரிவிதமான ஜப்பான் பங்கு வர்த்தக வளர்ச்சி பலருக்கு மேலும் ஆச்சரியத்தை தந்திருக்கிறது. இன்னும் சில ஜோதிடம் சாஸ்திர வல்லுனர்கள், சூரியன் உதிக்கும்-சூரிய நாடான ஜப்பானுக்கு, சூரியன் தன்னாட்சி பெரும் சித்திரை மாதப்பிரப்பின் விளைவு இது என்கிறார்கள். இதைப்போலவே ஐரோப்பாவின் "யுரோ" நாணயத்தின் அசுர வளர்ச்சியையும், அங்கு ஏற்ப்பட்ட பொருளாதார சீர்கேட்டையும் பெற்ற வர்த்தக வரலாறு இப்போது இதையும் தனது வரலாற்றுப் பதிவில் பாதிக்கின்றது.."காசேதான் கடவுளப்பா" .. http://youtu.be/qHkjZ_ceV-c

இன்றைய உலகளாவிய பார்வையில் வெள்ளிக்கிழமைகளில் வெள்ளித்திரை,

இன்றைய உலகளாவிய பார்வையில் வெள்ளிக்கிழமைகளில் வெள்ளித்திரை, வளைகுடா நாடுகளில் வெள்ளிக்கிழமையும், மற்ற நாடுகளில் சனி ஞாயிறு வார விடுமுறைநாட்கள் என்பதால், சர்வதேச அளவில் திரை அரங்குகளும், சின்னத்திரை நிகழிச்யிலும், வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு திரைப்பட காட்சி என்பது தற்ப்போது நிச்சயமாகிவிட்ட ஒன்று. சில நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு தீவிரவாத ஆங்கில திரைப்படம் ஒன்றிற்கு வடகொரிய அரசு அனுமதி அளித்துள்ளது இன்று அங்கு அந்த திரைப்படம் திரையிடப்படுகிறது. ஒரு சிறந்த திரைப்படம் சமுதாயத்தை சீரடயச்செயும் என்றாலும் சில திரைப்படம் சமுதாயத்திற்கு சீர்கீடாகவும் உள்ளது. நான் சந்தித்த ஒரு பிரபல திரையரங்கு நிறுவனத்தின் மேலாளர் ஒருவரது திறமையும் பாராட்டவேண்டிய ஒன்று, அவர் ஒரு தமிழர் அல்ல, தமிழில் அவருக்கு வெறும் நான்கு சொற்களே (வணக்கம், வாருங்கள், சாப்பிட்டீர்களா, நன்றி) தெரியும் இருந்தும் அவருக்கு ஏராளமான தமிழ் பேசும் நபர்கள் இருக்கிறார்கள், தமிழ் பேசத்தெரியாத அவர் பல தமிழ் இலக்கிய கூட்டத்தில் கலந்துகொள்கிறார். மேலும் அவரிடம் ஆயிரக்கணக்கிலான ரசிகர்களின் மினஞ்சல் மற்றும் கைத்தொலைபேசி விவரங்களின் தொகுப்பை உருவாக்கி அதை சிறப்பாக பயன்படுத்திவருகிறார். ஒவ் ஒரு வார இறுதி விடுமுறை நாட்களுக்கு அவர் பணிபுரியும் திரையரங்கில் திரையிடப்படும் திரைப்படம் குறித்த விவரங்கள் மற்றும் அந்த திரையரங்கில் கூட்டமில்லாத நாட்களில் வழங்கப்படும் நுழைவுச்சீட்டின் தள்ளுபடி விவரங்களையும் தவறாமல் அனைவருக்கும் தெரிவித்துவருகிறார். நன்கு பிழைக்கத் தெரிந்தவர்....... தமிழர்கள் மற்ற மொழி, நாடு, இனத்தவர்களிடம் நட்புடன் நல்ல பெயர் பெற்றாலும், ஒரு தமிழனுக்கு மற்றொரு தமிழன்தான் எதிரி என்கிற அளவில் தமிழருக்கிடயில்தான் நட்புமுறை சிறப்பாக இல்லை என்று தோன்றுகிறது. http://youtu.be/HYVmsb7q7zc

"மிட்டாய் கடை மூடியிருந்தால் வாங்கித்தருவேன், திறந்திருந்தால் வாங்கித்தரமாட்டேன்".....

"மிட்டாய் கடை மூடியிருந்தால் வாங்கித்தருவேன், திறந்திருந்தால் வாங்கித்தரமாட்டேன்"......... 2003ல் நடந்த சம்பவம் இது. எப்போதும் என் மனைவி குழந்தைகளிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொள்வார், எனவே என் மகன், மகள் இருவரும் "அப்பா" செல்லம். அன்று வழக்கம்போல அலுவலகத்திலிருந்து வீடு வந்ததும் குழந்தைகள் இருவரும் ஓடிவந்து, அப்பா இன்று சின்னத்திரையின் விளம்பரத்தில் புதியதாக அறிமுகமான "லாலி பாப்" மிட்டாய் பற்றி கூறி..... அப்பா, அப்பா, (பிளீஸ்)தயவுசெய்து வாங்கித்தாருங்கள் என்றனர். கண்டதையும் வாங்கித்தந்து குழந்தைகளின் உடல் நலனை கெடுக்காதீர்கள் என்று மனைவி கோபித்துக்கொண்டார். ஆகவே இதற்க்கு ஒரு தீர்வு காண, குழந்தகளிருவரிடமும், நான் சொல்லப்போவதை கவனமாக கவனியுங்கள் "மிட்டாய் கடை மூடியிருந்தால் வாங்கித்தருவேன், திறந்திருந்தால் வாங்கித்தரமாட்டேன்" என்றேன். அப்பா நீங்க எங்களை ஏமாத்தறீங்க என்று சிணுங்கிய குழந்தைகள், சிறிது நேரம் சென்றதும் இரு குழந்தைகளும் வேகமாக ஓடிவந்து அப்பா, அப்பா, கடை மூடி இருக்கிறது வாருங்கள் எங்களுக்கு மிட்டாய் வாங்கித்தாருங்கள் என்றனர்.
எனக்கு ஆச்சரியம், மூடியிருக்கும் கடையில் எப்படி வாங்குவது, இதை குழந்தைகளுக்கு பேசி புரியவைப்பதை விட, எதற்கும் நேரில் சென்று மூடிய கடையில் எதுவும் வாங்கமுடியாது என்று சொல்லி தப்பித்துக்கொள்ளவேண்டியதுதான், என நினைத்து அவர்களுடன் கடைக்கு சென்றேன். குழந்தைகள் ஒரு திறந்திருந்த மிட்டாய் கடையை காட்டி வாங்கித்தாருங்கள் என்றனர், ... நான் குழந்தைகளைப்பார்த்து "கடை மூடியிருந்தால் வாங்கித்தருவேன்" என்றல்லாவா கூறியிருந்தேன். இங்கோ கடை திறந்திருப்பதால் வாங்கித்தரமுடியாது என்றேன். அதற்க்கு குழந்தைகள் அருகிலிருந்த மற்றொரு மூடிய கடையை காட்டி, கடை மூடியிருப்பதால் வாங்கித்தாருங்கள் என்று கூறினார். எனக்கு குழந்தைகளின் சாமர்த்தியத்தை நினைத்து வியந்து சிரித்துவிட்டேன். அகவே குழந்தைகள் சாமர்த்தியமாக, அவர்கள் நினைத்ததை சாதித்துக்கொண்டார்கள்.
பெரும்பாலும் பெற்ற பிள்ளைகள், பெற்றோர்களிடம் போட்டியிட்டு வெற்றிபெறும் "குழந்தைகளாகத்தான்" இருக்கிறார்கள். அதாவது சில காதலர்களும் அப்படித்தான் பெற்றவர்களை எதிர்த்து வெற்றிபெற்றதாக நினைக்கும் "குழந்தைகளாகத்தான்" இருக்கிறார்கள்.
ஒரு உண்மை சம்பவம் கதையானது என்பதைவிட, பல கதைகள் பல உண்மையை போதிக்கின்றன என்பதை புரிந்துகொள்வது சிறந்ததல்லாவா???????...... உறவுகள் தொடர்கதைஉணர்வுகள் சிறுகதை. ஒரு கதை இங்கு முடியலாம், முடிவிலும் ஒன்று தொடரலாம். இனி எல்லாம் சுகமே.... http://youtu.be/52lDnAYzCUk
.......நன்றிகளுடன் கோகி.

FREE JOBS EARN FROM HOME