கோகி-ரேடியோ மார்கோனி

FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, March 8, 2013

இராகம்: கல்யாணி
 
பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு இலக்கணம் மிக முக்கியம். ஆனால் திரையிசை இயக்குநர்களுக்கோ, மனமகிழ்வு ஏற்படுத்துதல் மட்டுமே முக்கியம். வலைப்பதிவர்கள் போல, அவர்களுக்கு யார் கட்டுப்பாடும் கிடையாது. அதனால், அவர்கள் தங்களுக்குப் பிடித்தபடி, விருப்பப்பட்ட இராகங்களுக்கு, வேண்டுமென்றபோது, 'வித்தவுட்டில்' போய்விட்டு, பல்லவியில் சமர்த்தாக ஆரம்பித்த இராகத்திலேயே வந்து ஒட்டிக் கொள்வார்கள்.
 
கல்யாணி இராகம் 65ஆவது மேளகர்த்தா இராகம் (72 தாய் இராகங்களில் ஒன்று) திரைப்படத் இசையமைப்பாளர்களுக்கு இது ஒரு விருப்பமான ராகமாகும். குறிப்பாக இளையராஜா, கல்யாணி என்றால், ஒரு கலக்கு கலக்கி விடுவார். இந்த ஒரே ராகத்தில், பல வித்தியாசமான பாடல்களைத் தந்துள்ளவர் அவர். 'வெள்ளைபுறா ஒன்று', 'ஜனனீ, ஜனனீ', 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே', 'நிற்பதுவே நடப்பதுவே', 'காற்றில் வரும் கீதமே', என்று தொடரும் இந்த வித்தியாசமான பாடற் பட்டியலைப் பார்த்தால், கண்டிப்பாக நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள். திரைப்பாடலுக்கு போகும் முன்பு இந்த ராகத்தை பற்றிய சின்ன விளக்கங்கள்.
கல்யாணி- இந்த ராகத்தின் ஆரோகணம் (ஸ்வரங்களின் ஏறு வரிசை): ஸ ரி2 க3 ம2 ப த2 நி3 ஸ, அவரோகணம் (ஸ்வரங்களின் இறங்கு வரிசை): ஸ நி3 த2 ப ம2 க3 ரி2 ஸ...
கர்னாடக சங்கீத கச்சேரிகளின் கல்யாணி ரகத்தில் அமைந்த கீர்த்தனைகள்':- ....தியாகையர் கீர்த்தனையில்"நிதிசால சுகமா",... முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனையில்-"கமலாம்பாம் பஜரே ",... சியாமா சாஸ்திரி கீர்த்தனையில் "ஹிமாத்ரி சுதே பாஹிமாம்" இன்னும் தனிப்பாடல்களில் வரிசையில் நிறைய பக்திப்பாடல்கள் இருக்கிறது.
வட இந்தியாவில் இதே கல்யாணி இராகம், 'யமன்' என்றழைக்கப்படுகின்றது. இதற்கு, 'சாந்த கல்யாணி' என்ற மற்றொரு பெயருமுண்டு. இந்த இராகம், ஹங்கேரி நாட்டிலும் பிரபலம் என்பது பெரும்பாலோர் அறியாததொன்று. மேளகர்த்தா இராகமான கல்யாணியிலிருந்து 150க்கும் மேலான ஜன்ய இராகங்கள் பிறந்த்திருப்பதாகத் தெரிகின்றது. இப்போது திரைப்படப்பாடல்கள் வரிசையில்
 
முதலில் -பழைய பாடல்கள் வரிசையில்:-
இசை கேட்டால் புவி அசைந்தாடும் - தவப் புதல்வன்
நமக்கினி பயமேது - ஜகதலப்ரதாபன்
காவிரிப் பெண்ணே வாழ்க - பூம்புகார்
மன்னவன் வந்தானடி தோழி - திருவருட்செல்வர்
இடைக்காலப்பாடல்கள் வரிசையில்:-
கண்ணன் வந்தான் - ராமு *
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா - தெய்வ மகன் *
கலை வாணியே - சிந்து பைரவி *
உன்னை நான் பார்க்கையில் - கண்ணுக்கொரு வண்ணக்கிளி
புதிய பாடல்கள் வரிசையில்:-
#கொக்கு சைவக் கொக்கு - முத்து
#சிங்கநடை போட்டு - படையப்பா
#நிற்பதுவே நடப்பதுவே - பாரதி *
#உப்புக் கருவாடு - முதல்வன்.
முன்னமே கூறியது போல, இந்தப் பட்டியலில், கல்யாணி இராகம் எந்தெந்தப் பாடல்களிலெல்லாம், பிரதானமாக இருக்கிறது என்று கருதுகிறீர்களோ, அந்தப் பாடல்களை மட்டும் ஒருங்கே பதிவு செய்து, பத்து முறை கேட்டுப் பாருங்கள். அதன் பின், ஏதெனும் ஒரு சங்கீத கச்சேரிக்கு சென்று, பாடகர் 'நிதிசால சுகமா' அல்லது, 'பங்கஜ லோசனா' என்று பாட ஆரம்பித்தவுடன், "ஆபோகிதானே இது?" என்று அப்பாவியாய்க் கேட்கும் உங்கள் பக்கத்து சீட் பார்ட்டியிடம், "நோ, நோ. கல்யாணி ராகம் இது", என்று அசத்தலாம். அடுத்த பதிவில் நாம் தோடி: ராகம் இது எட்டாவது மேளகர்த்தா ரகத்தைப்பற்றிப்பார்போம். http://youtu.be/5-y-J9Pabq8
 
உங்களுக்கு கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல் பிடிக்கும் என நினைக்கிறேன் .
கல்யாணி ராகத்தில் அமைந்த திரைப்பட பாடல் பட்டியல் இது 01. ஆதாரம் உன்றன் திவ்ய பாதமே - பக்த கௌரி
02. அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ - சிறையில் பூத்த சின்ன மலர்
03. ஆடும் அருள் ஜோதி - மீண்ட சொர்க்கம்
04. ஆழ் கடலில் முத்தெடுத்து - ராகம் தேடும் பல்லவி
05. அம்மா என்றழைக்காத உயிரில்லையே - மன்னன் *
06. ஆராரோ ஆராரோ - ஆனந்த்
07. அத்திக்காய் காய் காய் - பலே பாண்டியா
08. சரணம் பவ கருணாமயி - சேது
09. தேவன் தந்த வீணை - உன்னை நான் சந்தித்தேன் *
10. என்னை ஒருவன் பாடச் சொன்னான் - கும்பக்கரை தங்கையா
11. இகலோகமே - தங்கமலை ரகசியம்
12. இளவட்டம் கேட்கட்டும் - மை டியர் மார்த்தாண்டன்
13. இசை கேட்டால் புவி அசைந்தாடும் - தவப் புதல்வன் *
14. இசையமுதம் - கோடீஸ்வரன்
15. ஜனனீ ஜனனீ - தாய் மூகாம்பிகை *
16. கலை வாணியே - சிந்து பைரவி *
17. கனவிலும் உனை மறவேன் நான் - மச்சரேகை
18. கண்ணாலே காதல் கவிதை சொன்னானே - ஆத்மா
19. கண்ணன் வந்தான் - ராமு *
20. காவிரிப் பெண்ணே வாழ்க - பூம்புகார் *
21. காற்றில் வரும் கீதமே - ஒரு நாள் ஒரு கனவு *
22. கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா - தெய்வ மகன் *
23. கொக்கு சைவக் கொக்கு - முத்து
24. மலையோரம் மயிலே - ஒருவர் வாழும் ஆலயம்
25. மனதில் ஒரு பாட்டு - தாயம் ஒண்ணு
26. மாநில வாழ்வு பெரும் ஆனந்தம் - அஷோக் குமார்
27. மஞ்சள் வெயில் - நண்டு *
28. மஞ்சள் வெயில் மாலையிலே - காவேரி
29. மன்னவன் வந்தானடி தோழி - திருவருட்செல்வர் *
30. முகத்தில் முகம் பார்க்கலாம் - தங்கப் பதுமை *
31. நதியில் ஆடும் பூவனம் - காதல் ஓவியம் *
32. நமக்கினி பயமேது - ஜகதலப்ரதாபன்
33. நான் என்பது நீ அல்லவோ தேவா - சூரசம்ஹாரம்
34. நான் பாட வருவாய் - உதிரிப் பூக்கள்
35. நானே உன் அடிமையே - மண மகள்
36. நீது சரணமுலே - சேவாசதனம்
37. நினைக்கின்ற பாதையில் அணைக்கின்ற - ஆத்மா
38. நிற்பதுவே நடப்பதுவே - பாரதி *
39. ஒரு வானவில் போலே - காற்றினிலே வரும் கீதம் *
40. பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் - பெண்
41. புத்தம் புது ஓலை வரும் - வேதம் புதிது
42. ராதா அழைக்கிறாள் - தெற்கத்திக் கள்ளன்
43. சங்கீதம் பாட ஞானம் உள்ளவர்கள் - இது நம்ம ஆளு *
44. செண்பகவல்லி உன்னைச் சேவித்தேன் - காசினி வேண்டினி
45. சிந்தனை செய் மனமே - அம்பிகாபதி *
46. சிங்கநடை போட்டு - படையப்பா
47. சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு - பாண்டி நாட்டுத் தங்கம்
48. சுந்தரேஸ்வரனே சுபகராக்ருபா - கன்னிகா
49. சுந்தரி கண்ணால் ஒரு சேதி - தளபதி *
50. சுத்திச் சுத்தி - படையப்பா
51. தாலாட்டும் காற்றே - தேவன்
52. தானே தனக்குள் - பேரும் புகழும் *
53. தாயைப் பணிவேன் - ஜகதலப்ரதாபன்
54. தாழையாம்பூ முடிச்சு - பாகப் பிரிவினை
55. தேன் சிந்துதே வானம் - சொல்லத்தான் நினைக்கிறேன் *
56. திருவளர் உருவே போற்றி - பக்த துளசிதாஸ்
57. துணிந்த பின் மனமே - தேவதாஸ் *
58. உள்ளம் ரெண்டும் - தூரத்து இடி முழக்கம்
59. உன்னை நான் பார்க்கையில் - கண்ணுக்கொரு வண்ணக்கிளி
60. உப்புக் கருவாடு - முதல்வன்
61. வா காத்திருக்க நேரமில்லை - காதலிக்க நேரமில்லை
62. வைதேகி ராமன் - பகல் நிலவு
63. வான் பொய்த்தாலும் தான் பொய்யா - ஆடிப் பெருக்கு
64. வந்தாள் மகாலக்ஷ்மியே - உயர்ந்த உள்ளம் *
65. வாசமல்லிப் பூவு - செவ்வந்தி
66. வீணையடி நீ எனக்கு - ஏழாவது மனிதன்
67. வெள்ளை புறா ஒன்று - புதுக் கவிதை *
68. விழிகள் மீனோ மொழிகள் தேனோ - ராகங்கள் மாறுவதில்லை
69. யாரறிவான் இறைவன் திருவருள் - ஞான சௌந்தரி http://youtu.be/5-y-J9Pabq8


 
Post a Comment

FREE JOBS EARN FROM HOME