கோகி-ரேடியோ மார்கோனி

FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Saturday, March 9, 2013

மலரும் நினைவுகள் :- "கூந்தல் கருப்பு, குங்குமம் சிகப்பு " இந்த பாட்டை கேட்டாலே எனக்கு அந்த நாள் (பள்ளிக்கூட நாட்கள்) ஞாபகங்கள்.... ,நானும் எனது நண்பனும் இப்படித்தான் எங்கு சென்றாலும் இணைந்தே செல்வோம்" அப்போது நாங்கள்(1976) உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது நடந்த இந்த இனிமையான சம்பவம்... நானும் எனது நண்பன் சுந்தர வடிவேல் இருவரும் காலையில் பள்ளிக்கூடம் செல்லும் வழியில் 6,7 பெண்கள் (மாணவிகள்) வழியை மறைத்தபடி... பேசியபடியே நடந்துவர.. எங்களுக்கு பின்னால் வரவும் சங்கடம் (பெண்கள் பின்னாடி போறாங்க பார் என்பார்கள்) முந்தி செல்லவும் முடியாமல் தர்மசங்கடமாக இருந்தது.....ஒரு யோசனை தோன்ற சட்டேன்று...அங்கபாருடா.. தலை "சவுரிமுடி" பின்னல் பிரிந்துவிட்டது" என கூற எல்லா பெண்களும் தனது பின்னல் முடியை தடவிப்பார்க்க ... அதற்குள் என் நண்பன் அடடா எல்லாரும் "சவுரிமுடி" வச்சிருக்காங்க போளிருக்குடா என கூற... எல்லா பெண்களும் வேக்கப்பட்டுக்கொண்டே ஓர் ஓரமாக சென்று வழிவிட, நங்கள் வழி கிடைத்த சந்தோசத்தில் வேகமாக அவர்களை கடந்து முன்னே சென்றோம்... அதுமட்டுமின்றி அதன்பிறகு அந்த பெண்களின் கூட்டத்தை கண்டாலே எனது நண்பன் இந்த பாடலை சத்தமாக பாடி அவர்களை வேக்கப்படவைப்பதை நானும் ரசித்திருக்கிறேன்... இன்றும் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த நினைவுகள் நெஞ்சில் நீங்க நினைவுகள்.... Koonthal Karuppu KV Mahadevan TMS P Susheela MGR கூந்தல் கருப்பு Song-கூந்தல் கருப்பு..http://youtu.be/7qv2K1Gd82c

மலரும் நினைவுகள்:-நான் எப்படி நடிகர் சிவகுமார் அவர்களின் ரசிகனானேன் ?....அப்போது நான் ஏழாம் வகுப்பில் படித்துகொண்டிருந்தபோது நடந்த நிகழ்வு அது ... எனது வகுப்பில் படித்துகொண்டிருந்த மாணவர்கள் (மாணவிகளும் ) எம் ஜி ஆர் மற்றும் சிவாஜிகணேசன் அவர்களின் ரசிகர்களாக இருந்தார்கள், அத்துடன் அவர்களிடம் இருந்த வண்ண படங்களை என்னிடம் காட்டி, என்னிடம் அது...போல் இல்லை என்பதால் என்னை கேலி செய்துகொண்டிருந்தர்கள். ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் நான் நடிகர் சிவகுமார் ரசிகன் என சொல்லிவிட்டேன்..... சற்று சப்தமாக கத்திவிட்டேன் போலிருக்கு, வகுப்பில் இருந்த அணைத்து மாணவ மாணவிகள் (என்வகுப்பில் மொத்தம் ஆருபத்தி ஏழு மாணவ மாணவிகள் ) என்பக்கம் திரும்ப... அன்று ஆரம்பித்ததுதான், ஒவ்வொரு முறையும் நடிகர் சிவகுமார் திரைப்படம் திரை இடப்படும்போதேல்லாம் வகுப்பில் நாந்தான் ஹீரோ "உங்கள் ஆளு இந்த படத்தில் சூப்பர் அல்லது சொதப்பிவிட்டார் என பல்வேறு விமரிசனங்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கும்" அன்று ஆரம்பித்ததுதான் இன்றும் எனது மனைவியும் குழந்தைகளும் நடிகர் சிவகுமார் அவர்களின் படமோ பாட்டோ சின்னத்திரையில் வந்தாலேபோதும், என் பக்கம் ஒரு பார்வை பார்க்காமல் இருந்ததில்லை... அப்படிப்பட்ட திரைப்பட நடிகர் சிவகுமார் அவர்களா?, இன்று மிகபெரிய இலக்கியவாதியாக மேடைகளில் கலக்குகிறார்... அவரின் இலக்கிய பேச்சுக்களை கேட்கும்போது என் கண்ணை என்னால் நம்பமுடியவில்லை... "நான் அவரின் தீவிர ரசிகன் என்பதில் தற்போதுதான் இன்னும் அதிக பெருமைபடுகிறேன்"

மலரும் நினைவுகள்:-"ஓர் ஆயிரம் நிலவே வா ... ஓர்.. ஆயிரம் நிலவே வா... (என்ன துடிப்போ அவள் நிலை, நீ உணர மாட்டாயா)என் கல்லூரி நாட்களை நினைக்கும் பொது நிச்சயம் இந்த பாடல் ஞாபகம் வரும். ஏன் எனில் ஓர் கல்லூரி விழாவில் யார் ஆதிகநேரம் அறுவை செய்கிறார்களோ அவர்களுக்கு அறுவை மன்னன் பரிசு என்கிற பந்தயத்தில் நான் முதல் பரிசை பெற்றேன் . இதோ அந்த பாடல்... 1000நிலவே வா , 999நிலவே வா , 998நிலவே வா, 997நிலவே வா, 996நிலவே வா, 995நிலவே வா , .................மேடயிலேருந்து குண்டுகட்டாக எனை துக்கி கீழ் இறக்கிவிட்டார்கள் (பரிசையும் தந்துதான் இறக்கிவிட்டார்கள்) http://youtu.be/oHUsQGYEen4

"நினைத்தாலே இனிக்கும்" மற்றும் "பிரியா" படப் பாடல் படமாக்கப்பட்ட இந்த இடத்தின் அருகேதான் நான் தங்கியுள்ள 21- அடுக்கு குடியிருப்பில் தற்போது எனது இருப்பிடம் உள்ளது , நான் தினமும் காலையில் உடர்ப்பயிற்சி செய்யும் இடம் இது (சிங்கப்பூரின் - சீன தோட்டம் மற்றும் அதன் அருகே அமைந்த ஜப்பான் தோட்டம்-(இங்கு 5 வித வண்ணத்தாமரை மற்றும் "இக்கிபானா"-உலகிலேயே அதிசய குட்டி மரங்களையும் இங்கு காணலாம் ) அருமையான இடத்தில் இருக்கிறாய் என்று எனது நண்பர்கள் கூறினாலும் எப்படாப்பா இந்த ப்ராஜெக்ட் வேலை முடியும் எப்ப நம்ம ஊர் போகப்போறோம் என்கிற ஏக்கம் உள்ளூர இருக்கும் "சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரைப்போல வருமா ?????????? http://youtu.be/5GA2rHlWYxE
இந்த படம் திரையில் சிவக்குமார் முருகன் வேடத்தில் தோன்றியபோது எனக்கு முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த பாட்டி ஒருவர் அவரது கன்னத்தில் போட்டுக்கொண்டு "முருகனே என் அப்பனே ' என்றார்... அப்போது அவர் அருகில் இருந்த ஒருவர், பாட்டி அது முருகன் இல்லை சிவகுமார் என்றார் அதற்க்கு அந்த பாட்டி "சிவா குமாரன்தான் முருகன்" என்று ஒரு போடு போட்டார். எனக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை... சிலநேரங்களின் நான் நேரடியாக திரையை பார்ப்பதைவிட அதை பார்க்கும் முகங்களை பார்பதுண்டு... ஆஹா எத்தனை விதமான ரசனைகள் முகத்திற்கு முகம் வேறுபாடும்அந்த ரசனை ...நீங்களும் அதை நேரில் பார்த்தால்தான் உங்களுக்கு புரியும். 

# Song-Kannan Oru Kai Kuzhanthai :- Movie:-Bhadrakali ,music composed by Maestro Ilaiyaraja,:- Sivakumar & Rani chandrakala இந்த "பத்ரகாளி" திரைப்படம் முடிந்த கையேடு படத்தின் கதாநாயகி ராணி சந்திரகலா மும்பை அருகே நடந்த ஒரு விமான விபத்தில் மரணமடைந்தார் ஆனாலும் இந்த படப் பாட்டில் அவர் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார், இந்த படம் சிவகுமாருக்கு ஒரு வெற்றி படமாக அமைந்தது, (115 நாட்கள் அரங்கு நிறைந்து ஓடிய படம் ) இந்த படத்தின் அணைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள். எல்லா பாடலும் எனக்கு பிடிக்கும் அதிலும் முக்கியமாக இந்த பாடல் (உன் அருகில் நான் இருந்தால் ஆனந்தத்தின் எல்லை அது- உன்மடியில் நான் உறங்க கண்ணிரண்டும் தான் மயங்க என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ ) Song-Kannan Oru Kai Kuzhanthai :- Movie:-Bhadrakali ,music composed by Maestro Ilaiyaraja,:- Sivakumar & Rani chandrakala http://youtu.be/HrPSdzcsrsE
மேலும் தவசி மற்றும் அருணாசலம் போன்ற படங்களில் நடித்த காலம்சென்ற(விமான விபத்தில் பலியானார்) நடிகை "சௌந்தர்யா" அவர்களின் பிறந்த தினமும் இன்று ஜூலை 17. அவரின் நினைவாக இந்த பாடல் " மாட்லாடு மாட்லாடு மல்லிகே என்று ஆரம்பிக்கும்... உறவினர்கள் சேர்ந்து பாடும்படி படமாக்கப்பட்ட கொண்டாட்டமான பாடல் இது http://youtu.be/X0bznnzTdno... விபத்தில் பலியானார் என்று குறிப்பிட்டிருப்பது மிகப் பொருத்தமான வார்த்தை ஒரு அரசியல் நிகழ்ச்சிக்கு பிரச்சாரத்திற்கு சென்ற பொது நடந்த விமான விபத்து அது, இப்படி ஒரு சிறந்த நடிகை விமான விபத்தில் பலியானார் என்பது இவரை சார்தவருக்கு மட்டுமில்லை திரைத்துறைக்கும் இழப்புதான்.
#"ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே Raathaiyin Nenjame " Movie:Kanimuthu papa, Music:TV Raju...Singer:P Susheela:-இந்த படம் 1972 இல் வெளிவந்தது, ராஜு அவர்கள்தான் இந்த பாடலை ஒரு ஹிந்தி படத்திலிருந்து "ஷர்மிலி (1971)" காப்பி அடித்தார் ."இந்த பாட்டு கணவன் மனைவிக்கு நடுவில் உள்ள புனிதமான உறவை பற்றிய பாடல் என்னக்கு மிகவும் பிடிக்கும், " ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே, ஆனந்த நினைவுகள் அன்று வந்த உறவிலே , வசந்த காலம் நேரில் வந்து வாழ்த்து கூறும் எங்களை .(ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே)..வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன்...கோவிலை போலவே குடும்பத்தை போற்றுவேன் ..மலையிட்ட மன்னனோடு மனம் நிறைந்து வாழுவேன். ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே."

தமிழ் திரைப்பட சரித்திரத்தில் முதன் முதலில் வில்லன் நடிகருக்கேன்று தனி ரசிகர்கள் கூட்டம் இருந்ததென்றால் அது வில்லன் நடிகர் ஜெமினி பிக்சர்ஸ் -சந்திரலேகா - "ரஞ்சன்" அவர்களுக்குத்தான்..... "அவா ஊதினா இவா வருவா" என்கிற பிரபலமான வசனம் இன்றும் பேசப்படும் சிறந்த வில்லன் வசனமாகும். முதன் முதலில் தமிழில் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கப்பட்ட தமிழ் படமும் இசை நடனமும் இதுவே. சந்திரலேகா"வில், எம்.கே.ராதா, ரஞ்சன் அனல் பறக்கும் கத்திச்சண்டை மற்றும் சந்திரலேகா திரைப்படம் ஒரே சமயம் 120 ஊர்களில் திரையிடப்பட்டது. 18,364 அடி நீளமுள்ள இந்தப்படம்( 3.5 மணி நேரத்திற்கும் மேல் அமர்ந்தது பார்க்கவேண்டிய பெரிய படம் ) மிகவும் விறுவிறுப்பாக ஓடிய படம். வில்லனுக்காகவே ஓடிய படங்களின் பெருமையில் அதன்பிறகு வந்த எம் ஆர் ராதா மற்றும் நம்பியார் அவர்களும் மேலும் அந்த வரிசையில் தற்போதைய நடிகர் "தகடு தகடு"சத்யராஜ் அவர்களுக்கும் உண்டு. http://youtu.be/jW-J8qU4cMA

# கல்லையும் கரைக்கும் சங்கீதம்....பாடல்-" சிவசங்கரி.... சிவானந்தலகரி, சிவசங்கரி ...சந்த்ரகலாவதி ஈஸ்வரி" கண்டசாலாவின் இந்துஸ்தானிய சங்கீத பாடல் படம்;-(JAGADHALAP PRATHABAN) ஜகதலப் பிரதாபன் (இதன் தமிழ் பதிவு சீர்காழி பாடியதும் உண்டு. கண்டசாலாவின் குரல் இனிமையோடு வர...சீர்காழி உற்சாகம் குறையாத கணீர் குரலோடு. ஒரே பாடல் .. ஆனல் இருவித ரசனை.) .http://youtu.be/xq0l5yT818U இது பாடல் இல்லை சிறு இசைக்கச்சேரி கருணா அமிர்தமுளு புரியகு நிலுமா, மனசுக்கு சுகம்கா மகிமை சூப்பகா ...Please tune in to A9 Radio and listen this song now.. in broth version / voice of Seergazhi Govindarajan & Ghantasala....

♥கொன்றால் பாவம் திண்றால் தீரும்♥

உங்களுக்கு இதைபற்றி...இதன் பொருள் என்ன என தெர்யும? தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் சொல்லுங்கள்.
#
என்னக்கு தெரிந்தது :- இந்த பழமொழி ஒரு கதையால் வந்தது. ஒருவர் பூனை ஒன்றை அறியாமல் கொன்றுவிட அதன் பாவத்தை போக்க அந்தனரிடம் சென்றான். அவரோ கொன்ற பாவம் தீர தங்கத்தால் ஒரு பூனை செய்து தானம் செய்யவேண்டும், அது முடியாது என்றால் வெள்ளியில் அல்லது சுவையான வெல்லத்தில் பூ...னை செய்து தானம் செய்யவேண்டும் என கூற...அவ்வாறே சுவையான வெல்லத்தில் பூனை செய்து தானம் செய்துவிட்டு உடனே அந்த பூனை வெல்லத்தை புடுங்கி தின்றுவிட்டார். அதாவது பூனை கொன்ற பாவம் அந்தணருக்கே, வெல்லம் தின்ற பவம் எனக்கு என கூறியதால் ... "கொன்றதால் பாவம் தின்றதால் போச்சு"


# "யாரும் உன்னை சொந்தம் கொண்டால்
இடையில் வந்த உரிமை என்றாய்...
அதற்காக நான் வழக்காடுவேன்
...யாரும் உன்னை திருடி செல்ல
பார்த்திருக்கும் தோழன் அல்ல
உனக்காக நான் காவல் நிற்பேன்....
எனது மனமும் எனது னினைவும்
உனது வாசமே...

நண்பனே எனது உயிர் நண்பனே

நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது..

எதிரியாக இருந்தாலும் நண்பனாக கருதுவது சிறந்த மனித பண்பு - ஒரு கடும் விஷம் உடைய கருந்தேள் தண்ணீரில் விழுந்துவிட்டது. அதைக்கண்ட குருநாதர், அதை தண்ணீரிலிருந்து காப்பாற்றியபோது "தேள் " அவரை கொட்டியது, இதைப்பார்த்த சிஷியன் குருவே தேள் கொட்டுகிறதே அதை ஏன் காப்பாற்றினீர்கள் என்றான், அதற்க்கு குரு சொன்னார் "தேளின் இயல்பு கொட்டுவது ..மனிதனின் இயல்பு ஆபத்தில் உதவுவது என்றார் மேலும் அவர் "எதிரியே ஆனாலும் நண்பனாய் பாவிப்பது சிறந்த மனிதனின் பண்பு என்றார்" http://youtu.be/TqB4aLfvF_4
Post a Comment

FREE JOBS EARN FROM HOME