FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, March 8, 2013

பூபாள ராகம் - இந்த ராகத்தில் அமைந்த பாடல்களை விடியற்காலையில் பாடுவது சிறப்பு

அமைதியான விடியற்காலை என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும்..எங்கோ வெகுதூரத்திலிருந்து காற்றில் தவழ்ந்துவரும் பக்தி கீதம் , அதிலும் மார்கழி மாதம் என்றாலே விடியற்காலையில் கோவிலில் அபிஷேக தரிசனம் முடிந்து ...வரிசையில் நின்று கைநிறைய சுட சுட பொங்கல் பிரசாதம் சாப்பிடும் அந்த தேவாமிருத சுவைக்கு ஈடு இணையே இல்லை.. .நான் இங்கு சொல்ல வந்தது , பூபாள ராகம் - இந்த ராகத்தில் அமைந்த பாடல்களை விடியற்காலையில் பாடுவது சிறப்பு, இந்த ராகத்திற்கு ஏற்ற இசைக்கருவி புல்லாங்குழல் மற்றும் "சுப நாயனம்" இத்துடன் 'கடம் அல்லது மிருதங்கம்" வாசிக்க தகுந்தது என புராணங்களில் குறிப்பு உள்ளது (முன்னோர்கள் வகுத்த நெறிமுறைகளை பின்பற்றுவது எவருக்கும் எந்த காலங்களுக்கும் சிறந்தது) ஆண் பால் ராகமான இந்த ராகத்தின் ஷட்ஜமம்- சுத்த ரிஷபம், (அந்தரகாந்தாரம்) பஞ்சமம், சுத்த தைவதம் (முக்கியமாக -‘மத்யமம்’, ‘நிஷாதம்’ ஆகிய ஸ்வரங்கள் இந்த ராகத்தில் இல்லை எனலாம்) (ஆண் பால் ராகம் என்றால் ஆண்கள் பாடக்கூடியது என்று ஏதும் அர்த்தம் இல்லை ..சுருக்கமாக இந்த ராகம் உச்சஸ்தாதியில் (கட்டை) ஏற்ற இரக்கங்களின் அளவிற்க்கேர்ப்ப தன்மையை உணர்ந்து, ராகங்களை வகைப்படுத்தினார்கள் ...இன்னும் பால விவரம் உள்ளது எல்லாவற்றையும் கூறுவது என்பது இந்த இடத்தில் மெத்த கடினம்) இப்போது இந்த ராகத்தில் அமைந்த பக்திப்பாடல்கள் பல உள்ளது "கைதல நிறைகனி "....முதலில்முக்கியமான நமது முழு முதர்க்கடவுலான விநாயகர், முருகன் பாடல்கள் மற்றும் கண்ணன் பாடல்களும் அதிகம் உள்ளது. திரைப்படப் பாடல்கள் -(மகாநதி) ஸ்ரீ ரங்கா ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி, அதிகாலையில் சேவல்-ஐ எழுப்பி அதை கூவென்று சொல்லுகிரேன், உன்னிடம் மயங்குகிறேன் உள்ளாத்தல் நெருங்குகிறேன், சலங்கையிட்டாள் ஒரு மாது, தெய்வீக ராகம் திகட்டாத பாடல் கேட்டாலே போதும்,நானாக நான் இல்லை தாயே, பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் (கலப்பு ), இப்படி பல பாடல்கள் உள்ளது http://youtu.be/eKZy3DK5KBg

No comments:

FREE JOBS EARN FROM HOME