FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, March 8, 2013

[கேம்பஸ்] கல்லூரியில் நேர்காணல்/நேர்முகத்தேர்வு

பல நிறுவனங்கள் [கேம்பஸ்] கல்லூரியில் நேர்காணல்/ நேர்முகத்தேர்வு நடத்துவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னமே, மாணவர்களை நேர்காணலுக்கு தயார்படுத்துவதற்கு எங்களைப்போன்ற ஆலோசகர்களின் உதவியை நாடுவார்கள், நான் பார்த்த பல மேலாண்மை கல்லூரிகளில் அறுபது சதவிகித மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள திணறுகின்றனர். நல்ல மதிப்பெண் பெற வழிகாட்டியவர்கள், நல்ல வேலைவாய்ப்பை பெறுவது எப்படி என்பதில் அதிகம் வழிகாட்டுதல் கிடைக்காமல் தினருவதையே பார்க்கின்றேன். 
#கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு... மேல்நிலை படிப்பு என்று வரும்போதே என்ன படிப்பது என்று மாணவ மாணவியரும், என்ன படிக்கவைகலாம் என்று பெற்றவர்களும் சிந்தனை செய்யத்தொடங்கிவிடுகின்றனர். தற்போதைய நிலையில் படிப்பு என்றாலே மிகப்பெரிய தொகையை செலவு செய்யவேண்டி கட்டாயம் உள்ளது. கடன் பெற்று செய்த கல்வி செலவுகள் எத்தனை விரைவாக கடனையும் அடைத்து குடும்பத்திற்கும் உபயோகமாக சம்பாதிக்கமுடியும் என்பதில் எவருக்கும் ஒரு
தீர்கமான முடிவோ சிந்தனை இல்லை என்பதுதான் உண்மை. இப்படிப்பட்ட சூழலில்தான்..தற்போதைய கல்விக் கண்காட்சியிலும, மற்றும் பல நிறுவனங்களின் [Campus interview] கல்லூரியில் நேர்காணலின்போதும் அனைத்து மாணவர்களுக்கும் இதை எதிர்கொள்வது எப்படி என்பதை கூறிவருகிறேன். குறைந்த செலவில் மிக விரைவிலும் எளிதாகவும் வேலைவாய்ப்பை பெரும் கல்வியாக கீழ்வரும் 5 பாடப்பிரிவுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
1. வணிகவியல் (Commerce) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் மூன்று ஆண்டுகள் கல்லூரி பட்டப் படிப்பையும் முடித்தாலே போதுமானது-மேற்கொண்டு வேலையில் சம்பாதித்துக்கொண்டே படித்துக்கொள்ளலாம்) 5years course of BCOM-BL, or FICA, BCS...போன்றவை....
2. மருத்துவ செவிலியர் (Nursing) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் மூன்று ஆண்டுகள் கல்லூரி பட்டப் படிப்பையும் முடித்தாலே போதுமானது அல்லது பட்டயப்படிப்பை(Diploma) படித்தாலும் போதும்)
3. கணினிக்கல்வி (Computer) (பல்வேறு விதமான கணினி சார்ந்த பட்டய மற்றும் உயர் பட்டப் படிப்புகள் )
4. ஆசிரியர் பயிற்சி.(Teachers Training)
5. சட்டக்கல்வி (Law) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் 3 ஆண்டு சட்டக் கல்வி அல்லது ஒரு சிறு சட்டம் சார்ந்த பட்டயப்படிப்பை(Diploma) படித்தாலும் போதும், தனியார் பணியிடங்களில் அதிக வேலைவாய்ப்புகள் நிறைந்திருக்கும் கல்வி இது)
கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு... வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு http://youtu.be/qvCDPf1_Qeg
உங்களின் குழந்தைகளுக்கு பத்து வயது பூர்தியாகும்போதே ஏதாவது ஒரு வங்கியில் இளையவர் வங்கிக்கணக்கை துவங்கிவிடுங்கள். காரணம் உயர் கல்வி படிப்பிற்கு தேவையான தொகை கிடைக்காதபோது நீண்ட நாட்கள் வங்கி கணக்கை வைத்திருந்த தகுதியின் அடிப்படையில் உங்களின் மகள்/மகனுக்கு அதே வங்கியில் உடனே கல்விக்கடன் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதாவது 18 வயதிற்கு பிறகு உங்களின் மகள்/மகன் படிப்பு செலவுக்கு உங்களை சார்ந்து இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை, அவர்களாகவே கல்விக்கடன் பெற்று அவர்களின் விருப்பப்படி படிக்க முடியும். அவர்களின் காலில் அவர்களே நிலைத்து நிற்கும் பொறுப்புள்ளவர்களாக உங்கள் பிள்ளைகளும் இப்படிப்பாடுவார்கள் "எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்...வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே". http://youtu.be/geYyN5_QYKg
,கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு... வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு http://youtu.be/qvCDPf1_Qeg
#"நான் ஒரு குமாஸ்தா நான் படுவேன் தமாஷா" பல நிறுவனங்கள், [Campus interview] கல்லூரியில் நேர்காணல்/நேர்முகத்தேர்வு நடத்துவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னமே, மாணவர்களை நேர்காணலுக்கு தயார்படுத்துவதற்கு எங்களைப்போன்ற ஆலோசகர்களின் (Consultant) உதவியை நாடுவார்கள், நான் பார்த்த சில மேலாண்மை(Management MBA&MCA) கல்லூரிகளில் அறுபது சதவிகித மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள திணறுகின்றனர் என்பது நன்கு தெரிகிறது. நல்ல மதிப்பெண் பெற வழிகாட்டியவர்கள், நல்ல வேலையை பெறுவது எப்படி என்பதில் அதிகம் வழிகாட்டுதல் கிடைக்காமல் தினருவதையே பார்க்கின்றேன். அந்த வகையில் ஒரு மேலாண்மைக்கல்லூரியின் நேர்காணலின்போது "பிரபல ஐ டி நிறுவனத்தில் பலர் இப்படித்தான் நினைக்கிறார்கள் என கூறி... அதற்க்கு சரியான ஒரு ஆலோசனை தரும்படி என்னை கேட்டுக்கொண்டனர் , அதாவது புதிதாக வேளையில் சேருபவர்களுக்கு, வெகுகாலம் வேலையில் இருப்பவர்களைவிட அதிகம் சம்பளம் தருகிறார்கள். அதோடு புதிதாக வருபவர்களுக்கும் பழையவர்கள் வழிகாட்டியாகவும் இருக்கவேண்டும், எனவே வேலையே ராஜினாமா செய்துவிட்டு திரும்பவும் இதே நிறுவனத்தில் புதிதாக அதிக சம்பளத்தில் மறுபடியும் சேர்ந்தால் என்ன என்று எண்ணுகின்றனர். என்றார் " அதற்க்கு நான் இருகோடுகள் திரைப்படத்தில் வரும் தத்துவ வசனத்தை" (சிறிய கோட்டிற்கு அருகே ஒரு பெரிய கோடு போடவேண்டும்) என்று எடுத்து சொன்னேன் " எது பெரிய மற்றும் சிறிய கோடு என்பதை புரியவைத்து அதற்க்கு ஏற்ப தகுதியையும் திறமையையும் வளர்த்துக்கொள்ள தேவையானதை செய்யுங்கள் என்றேன்". "நான் ஒரு குமாஸ்தா நான் படுவேன் தமாஷா" http://youtu.be/YGHTH7fE_tc
அவனுக்கு அன்று ஒரு மின்சாதன பொருட்கள் தயாரிப்பின் தலைமை அலுவலகத்தில் நேர்முகத்தேர்வு இருந்தது. அந்த அலுவலகம் இருந்த பத்தாவது மாடியை அடைந்ததும் அங்கு வந்திருக்கும் கூட்டத்தைப்பார்த்து அதிர்ந்து போனான். இந்த கூட்டத்தில் நமக்கு வேலை கிடைத்தாமதிரிதான் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே பலமணி நேரம் காத்திருந்த பின்பு அவனது அழைப்பு வந்ததும் அந்த நேர்முகத்தேர்வை எதிர்கொண்டான். மனதின் நம்பிக்கை தளர்ந்து போனதால் மனச் சோர்வுடன் " மின்தூக்கியை பயன்படுத்தாமல்" நிதானமாக படிக்கட்டின் வழியாக படியிறங்கி நடக்கலானான். அந்த அலுவலக கட்டிடத்தின் தரைப்பகுதிக்கு வந்தவுடன் அவனை அங்கு வந்த ஒரு அலுவலக அதிகாரி கை குலுக்கி வரவேற்று "நீங்கள் இந்த வேலையில் சேர தகுதிபெற்றுவிட்டீர்கள், அலுவலகத்திற்கு வந்து உங்களின் வேலைவாய்ப்பு ஆணையை பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்". மின்தூக்கியை பயன்படுத்தாமல் நிலைப்படியில் நடந்துவந்து மின்சாரத்தை சேமிக்க உதவும் எண்ணம் உடையவர் என்பதாக அவருக்கு அந்த வேலை வாய்ப்பு கிடைத்தது. "நேரம் நல்ல நேரம், உன்னை நெருங்கி பார்க்கும் நேரம். காலம் நல்ல காலம்...." http://youtu.be/hIfmUOo1yyQ
#அவள் நேர்முகத்தேர்விர்க்காக சிறிது காலதாமதமாக ஓடோடி குறிப்பிட்ட அந்த அலுவலகத்தினுள் நுழைந்தால் நல்ல வேலை கூட்டமே இல்லை ஒரே ஒரு ஆள் மட்டும் டிப் டாப் உடை அணிந்து உட்கார்ந்திருந்தார். அவள் மனதுக்குள் பல எண்ணங்கள் ஓடியது வந்திருக்கும் இவன் ஒருவனை துரத்திவிட்டால் இந்த வேலை நமக்குத்தான் என்று மனக்கணக்கு போட்டு அதற்க்கான முயற்சியில் அவனை நோக்கி நகர்ந்தால். வணக்கம் என்னுடைய பெயர் வசந்தி நான் இந்த நிறுவனத்தின் பணியாளர் நல ஆணையராக இருக்கிறேன், இன்று இந்த நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டு தேர்வு செய்யவேண்டிய முக்கியமான இருண்டு அதிகாரிகள் வராததால் நேர்முகத்தேர்வு வேறு ஒரு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது, பின்னர அதை உங்களுக்கு தெரியப்படுத்துவோம் ஆகவே நீங்கள் போகலாம் என்று கூறிவிட்டு அலுவலகத்தின் உள்ளே செல்வதுபோல் நடித்து சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தால். அந்த அலுவலக வரவேற்ப்பரையில் யாரும் இல்லாது வந்திருந்த ஒருவனும் சென்றுவிட்டபடியால் தனக்குத்தான் இந்த வேலை வாய்ப்பு என்று சந்தோசமாக அமர்ந்திருக்க, அப்போது அவளது பெயர் அழைக்கப்பட்டு நேர்முகத்தேர்விற்கு உள்ளே போகச்சொன்னார்கள் ... உள்ளே நுழைந்த அவள் அதிர்ந்து போனால் சற்று நேரம் முன்பு யாரை விரட்டியாடித்தாரோ, அவர் அங்கு நிறுவனத்தின் உயர் அதிகாரியாக உட்கார்ந்திருந்தார்.
நிறுவனத்தின் மேலாளர் என்பவர் விரல் நுனியில் விவரங்களை வைத்திருக்க வேண்டமா? "மேலாளர்" பதவிக்காக நேர்காணல் தேர்வுக்கு வந்திருந்த ஒருவரை அந்த நிறுவன உரிமையாளர் "கழிவறை நாற்றமடிக்கிறது சுத்தம் செய்துவிட்டு வா" என்றார்.
இப்போது இந்த விளையாட்டின் பந்து உங்களிடம் உள்ளது. நேர்காணலுக்கு வந்திருப்பவர் நீங்கலாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்.
#பொதுவாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் சொல்வதைக்கூட சுத்தகரிப்பு தொழிலாளி சரியாக செய்யமாட்டார். நீங்களோ இன்னமும் அந்த நிறுவனத்தில் சேரவில்லை ஆகவே உங்களுக்கு அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் உதவமாட்டார்கள்.
#நீங்களாகவே கழிவறையை பெருக்கி சுத்தம் செய்தால் நீங்கள் அந்த பணிக்குத்தான் லாயக்கு என்று முத்திரை குத்தப்படலாம்.
#மேலாளர் பதவிக்கு வந்த என்னைப்பார்த்தா இப்படி சொன்னாய் என்று கோபித்துக்கொண்டு "சரிதான் போடா சொட்டத்தலையா" என்று திட்டிவிட்டு வந்துவிட்டாலும் நீங்கள் மேலாளர் பதவிக்கு லாயக்கு இல்லாதவர் என முத்திரை குத்தப்படும்.
# இந்த கேள்விக்கான பதில் என்ன என்றால்... உங்களின் " விரல் நுனியில் உள்ள விவரங்களை" பயன்படுத்தி கழிவறை சுத்தகரிக்கும் நிறுவனத்தை அழைத்து சுத்தம் செய்யச்சொல்லி, பிறகு சுத்தமான கழிப்பிடத்தை அந்த நிறுவன உரிமையாளரிடம் காண்பித்து "சபாஷ் மிக அருமையாக செய்திருக்கிறாய்" என்று கூறும்போது.... கழிவறை சுத்தகரித்த நிறுவனத்தின் செலவு சீட்டை தந்து அதற்க்கான தொகையை செலுத்துமாறு கூறவேண்டும். ...."வேலை இல்லாதவன்தான் வேலை தெரிஞ்சவந்தான் வீரமான வேலைகாரன் வெவகாரமான வேலைக்காரன்..... "
அடுத்த நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? மீண்டும் நாளை சிந்திப்போம்...வணக்கம் http://youtu.be/HlYJd-bLiPk
வணக்கம் இன்று ஒரு வேடிக்கையான நேர்முகத்தேர்வு விவரத்தை பார்ப்போம், அது ஒரு மருத்துவக்கல்லூரி சேர்வதற்கான மாணவர்களின் நேர்முகத்தேர்வு நடந்துக்கொண்டிருந்தது, அப்போது ஒரு மாணவியிடம் நீ ஏன் மருத்துவராக ஆசைப்படுகிறாய் என்கிற கேள்வி கேட்கப்பட்டது அதற்க்கு அந்த மாணவி "மக்கள் தொகையை கட்டுப்படுத்த" எனக்கூறிய பதிலைக்கேட்ட அனைவரும் சிரித்துவிட்டனர். அதாவது மருத்துவராகி அனைவரையும் கொள்ளப்போகிறாய் என்பதாக அர்த்தமாகிவிட்டதை உணர்ந்த அந்த மாணவி உடனே "இல்லை இல்லை நான் சொல்லவந்தது குடும்ப கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவேன்" என்று மாற்றிக் கூறினார்.... இறுக்கமான அந்த இடத்தில் அந்த மாணவியால் சிறிது நேரம் சிரிப்புடன் மகிழ்ச்சி சூழ்நிலை ஏற்ப்பட்டதினாலே அவருக்கு மருத்துவகல்லூரியில் சேர தகுதி வாய்ப்பு கிடைத்தது. இங்கு இணைத்திருக்கும் இந்த பாடல் திரைப்படம், மிஸ்ஸியம்மா. கதாநாயகன் ஜெமினி கணேசன் மற்றும் கதாநாயகி- சாவித்ரி இருவரும் கணவன் மனைவி என்று பொய் சொல்லி வேலை பெற்றபோது திரையில் வரும் பாடல் குரல் : பி சுசிலா, இசை : எஸ். ராஜேஸ்வர் ராவ், நடிகை : ஜமுனா, பாடல் :- அறியாப் பருவமடா - மலர் அம்பையே வீசாதடா... மதனா... (அறியா) .. மீண்டும் நாளை சிந்திப்போம்...வணக்கம். http://youtu.be/TS0cm07-_oo

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம் அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம். http://youtu.be/zwlulhmOF8s


வணக்கம் இன்று ஒரு வேடிக்கையான நேர்காணல் விவரத்தை பார்ப்போம், அது ஒரு மருத்துவக்கல்லூரி சேர்வதற்கான மாணவர்களின் நேர்காணல் நடந்துக்கொண்டிருந்தது, அப்போது ஒரு மாணவியிடம் நீ ஏன் மருத்துவராக ஆசைப்படுகிறாய் என்கிற கேள்வி கேட்கப்பட்டது அதற்க்கு அந்த மாணவி "மக்கள் தொகையை கட்டுப்படுத்த" எனக்கூறிய பதிலைக்கேட்ட அனைவரும் சிரித்துவிட்டனர். அதாவது மருத்துவராகி அனைவரையும் கொள்ளப்போகிறாய் என்பதாக அர்த்தமாகிவிட்டதை உணர்ந்த மாணவி உடனே "இல்லை இல்லை நான் சொல்லவந்தது குடும்ப கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவேன்" என்று மாற்றிக் கூறினார்.... இறுக்கமான அந்த இடத்தில் அந்த மாணவியால் சிறிது நேரம் சிரிப்புடன் மகிழ்ச்சி சூழ்நிலை ஏற்ப்பட்டதினாலே அவருக்கு மருத்துவகல்லூரியில் சேர தகுதி வாய்ப்பு கிடைத்தது.

&வழக்கம் போல நடக்கும், இரயில் போக்குவரத்துத்துறையின் வேலைவாய்ப்பு நேர்காணல்(நேர்முகத்தேர்வு) நடந்துகொண்டிருந்தது அப்போது நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்தவரைப் பார்த்து, "இரண்டு இரயில் வண்டிகள் எதிர் எதிரே, ஒரே இருப்பு பாதையில் வேகமாக வந்துகொண்டிருக்கிறது, அதை பார்த்த நீ என்ன செய்வாய்" என்று கேட்கப்பட்டது.
தேர்வுக்கு வந்திருந்தவர்:- சிகப்பு கோடி காட்டி நிறுத்திவிடுவேன் என்றார்.
தேர்வாளர்:- அது இரவு நேரமாக இருந்தால் என்ன செய்வாய் என்று கேள்வி கேட்க.
தேர்வுக்கு வந்திருந்தவர்:- சிகப்பு விளக்கு காட்டி வண்டியை நிறுத்துவேன் என்றார்.
தேர்வாளர்:- சிகப்பு விளக்கு உன்னிடம் இல்லாமல் போனால் என்ன செய்வாய்?
தேர்வுக்கு வந்திருந்தவர்:- சட்டையை கழற்றி அதில் நெருப்பு பற்றவைத்து அந்த வெளிச்சத்தை கொண்டு வண்டியை நிறுத்திவிடுவேன் என்றார்.
தேர்வாளர்:- அப்படி செய்தும் வண்டி நிற்காவிட்டால் என்னசெய்வாய்?
தேர்வுக்கு வந்திருந்தவர்:- சற்று கடுப்புடன் யோசித்த பிறகு, "வீட்டிற்கு சென்று என்னுடைய தங்கையை அழைத்து வருவேன்" என்றார் ???????????????
தேர்வாளர்:- ஏன் அப்படி,.... உன் தங்கை வந்து வண்டியை நிருத்திவிடுவாரா !!!!!
தேர்வுக்கு வந்திருந்தவர்:- இல்லை ஐயா, இப்படி இரண்டு இரயில் வண்டிகள் நேருக்கு நேர் மோதிக்கொள்வதை எனது தங்கை இன்றுவரை பார்த்ததே இல்லை, ஆகவே அவளை அழைத்துவந்து வேடிக்கை பார்க்கச்சொல்வேன் என்றார்....
சிறிது நேரம் சிரிப்புடன் கூடிய மகிழ்ச்சி சூழ்நிலை ஏற்ப்பட்டதினாலே அவருக்கு வேலையில் சேர வாய்ப்பு தரப்பட்டது.
அது ஒரு பழுது பார்க்கும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனம், அன்று அந்த நிறுவனத்தில் பொறியியல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான(Engineers) சில காலி இடங்கள் நிரப்புவதற்கு நேர்முகத்தேர்வு நடந்துகொண்டிருந்தது, தேர்வுக்கு வந்திருந்த ஒரு பொறியியல் வல்லுனரிடம் அந்த நிறுவனத்தின் தலைமை அதிகரி ஒரு சிறிய கல் உடைக்கும் உளியையும்(chisels) அதோடு ஒரு சுத்தியலையும்(Hemmar) தந்து நிறுவனத்தின் வாசல் பகுதியில் வைத்திருக்கும் ஒரு பெரிய பாறாங்கல்லை எவ்வளவு விரைவாக முடியுமோ அந்தனை விரைந்து தூள் தூளாக உடைத்துவிட்டு வாருங்கள் எனக்கூறினார். அதைக்கேட்ட நேர்முகத்தேர்விற்கு வந்திருந்த பொறியியல் பட்டதாரி நபர், நான் அவ்வாறு செய்வது சாத்தியமில்லை என்று கூறி வெளிநடப்பு செய்துவிட்டார். அடுத்து வந்த ஒரு பொறியியல் பட்டயப்படிப்பு(Diploma) படித்த நபர், உளி மற்றும் சுத்தி போன்ற பொருட்களை நிறுவன அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொண்டு நேராக அந்த பெரிய பாறை இருக்கும் இடம் நோக்கி நடந்தார். அப்போது அந்த நிறுவன அதிகாரி நில்லுங்கள், எதிர் கேள்வி கேட்க்காமல் எதையும் செய்ய தயாராகும் மனப்பக்குவம் கொண்ட நபரைத்தான் இந்த பதவிக்கு தேவை என இந்த நிறுவனத்தின் முடிவிற்கு நீங்கள் தகுதியுடையவராக, உங்களை நாங்கள் இந்த பனி இடத்திற்கு தேர்வு செய்திருக்கிறோம். அதற்க்கான பனி உத்தரவை பெற்றுக்கொள்ளுங்கள் என்றார். "நாளை உலகை ஆளவேண்டும் உழக்கும் கரங்களே, இந்த நாடு முழுதும் வளரவேண்டும் உழக்கும் கரங்களே ... வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே " http://youtu.be/WR84yInGjCE
 

No comments:

FREE JOBS EARN FROM HOME